Home Politics Events விசிக தேர்தல் அறிக்கை: திருமா வெளியிட்டார் – மாலைச்சுடர்

விசிக தேர்தல் அறிக்கை: திருமா வெளியிட்டார் – மாலைச்சுடர்

Comments Off on விசிக தேர்தல் அறிக்கை: திருமா வெளியிட்டார் – மாலைச்சுடர்

http://www.maalaisudar.com/?p=47595

சிதம்பரம், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சிதம்பரம் தி.முக. கூட்டணி தேர்தல் அலு வலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் வெளியிட்டார்.
சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தேர்தலுக்கான தனி தேர்தல் அறிக்கையைகட்சியின் தøலைவரும் வேட்பாளருமான திருமாவளவன் 48 பக்கத்தில் சிறிய அளவிலான புத்தக வடிவில் அறிக்கையை வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில் தேர்தல் முறையில் மாற்றம், புதிய லோக்பால், நீட் தேர்வு ரத்து, வருமான வரி ரத்து உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை அகல பாதாளத்தில் தள்ளி விட்டது அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் வருமானவரி முறையை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு ஆயுதம் வழங்குவதுடன் தற்காப்பு பயிற்சி அளிக்கவேண்டும்.
100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக மாற்றம் கொண்டு வருதல், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேர்களை விடுதலை செய்ய விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தும் ஒரு வருடத்திற்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் அனைவரையும் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி விடுவிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு வெளியிடவும் இணையத்தில் பாலியல் தளங்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தும்
மேலும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை விடுதலை சிறுத்தை கட்சியை வரவேற்று பாராட்டு தெரிவிக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
Load More Related Articles
Load More By admin
Load More In Events
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …