நமது பாரத பிரதமர் அவர்களை தலைவராக கொண்டு செயல்படும் இந்திய திட்டக் குழு மற்றும் அதன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா அவர்களும் அவர்களது குழுவும் சேர்ந்து தயாரித்துள்ள அறிக்கையின் படி நகர் புறத்தில் 35 ரூபாயும் கிராம புறத்தில் 25 ரூபாயும் வருமானம் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களாக கனகிடபட்டுள்ள மக்களின் தொகை சுமார் 4௦ கோடிக்கு மேல். இதற்கு கடுமையான் எதிர்ப்பு கிளம்பவே திட்டக் குழு பின் வாங்கி தனது அறிக்கையை திருத்தி அமைக்க முன்வந்துள்ளது.
இப்படி அறிக்கை அளித்தின் மூலம் ஒரு தகவலை திட்டக் குழு உறுதி செய்துள்ளது . 1௦௦ கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் 4௦%க்கும் அதிகமானபேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது. ஆனால் இந்த உண்மை கூட பாதி உண்மை என்பது தான் உண்மை.
இவ்வளவு குறைவான தொகையினை நிர்ணயித்து வறுமை கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று நினைத்தார்கள் ஆனால் அது நடக்காமல் போய்விட்டது , மாறாக இந்த எண்ணிக்கையை கூட்டும் நிலை உருவாகிவிட்டது , ஏனெனில் உச்ச நீதி மன்றத்தில் குழு அளித்துள்ள அறிக்கையின்படி மீண்டும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான தொகையினை மறு ஆய்வு செய்து உயர்த்துவதாக திட்டக் குழு அறிவித்துள்ளது அதன் படி நடந்தால் மீண்டும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் , 4௦% மானது சுமார் 6௦% மாக உயர வாய்ப்புள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் நிலைமை கேலிக்குரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அரசின் புள்ளி விவரம் என்பது எதிர்மறையான தகவல்களை திருத்து கூறுவது தானே வழக்கம். இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 75 % இருந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை . இதற்கு தானா அலுவளியவும் மன்மோகனும் இப்படி பாடுபடுகிறார்கள். வெட்கம் …..