Home Article காந்தளவாடி பிரியா படுகொலை..

காந்தளவாடி பிரியா படுகொலை..

Comments Off on காந்தளவாடி பிரியா படுகொலை..

 பாமக வன்னியரின் மற்றொரு வெறியாட்டம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேஎம்சி கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வந்தவர் காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரியா, இவரது தந்தை ஏழுமலை தனது மகளை காந்தளவாடியிலிருந்து பேருந்தில் அனுப்பி படிக்க வைக்க முடியாதக் காரணத்தினால் பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவாமூர் கிராமத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்

் பிரியா. இந்நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான காரணத்தினை கேட்டால் நம் எப்படி மனநோயாளிகளின் மத்தியில் சிக்கியிருக்கிறோம் என்பது புரியும்.

திருவாமூருக்கு அருகில் உள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியப் பெண்ணான சரண்யாவை காந்தளவாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகண்டன் என்ற தலித் இளைஞர் காதலித்துத் திருமணம் செய்துக் கொண்டார். அவர்களது வாழ்க்கை நல்லபடியாகத் போய்க் கொண்டிருக்கிறது. அது சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர்களுக்குப் பொருக்கவில்லை. சிவகண்டனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று துடித்து வந்தனர். இந்த நேரத்தில் தான் காந்தளவாடியைச் சேர்ந்த பிரியா சிறுவத்தூர் சேரியில் தங்கிப் படிப்பது தெரிய வந்திருக்கிறது. எனவே பிரியாவை தொடர்ந்து வன்னிய இளைஞர்கள் அவமதிப்பதும் மிரட்டுவதுமாக இருந்துள்ளனர். ‘எங்க வீட்டுப் பொண்ண உங்க ஊர் பையன் தூக்கிட்டுப் போய்விட்டான் அதற்காக உன்னையாவது நாங்கள் பழிவாங்குவோம்’ என்று மிரட்டி வந்ததாக பகுதி மக்களுக்கு தெரியவந்துள்ளது. எனினும் பிரியாவை அந்த சாதி வெறியர்களிடருந்து பாதுகாக்க முடியவில்லை. நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் இருந்தும் அங்கு பாதுபாப்பு ஏதும் கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகுதான் மனம் பதைக்கும் அந்தக் கொடூரத்தை சாதி வெறியர்கள் அரங்கேற்றினார்கள். அருகில் உள்ள நத்தம்பட்டு கிராமத்தில் உள்ள குளத்தில் பிரியாவின் பிணம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அருகில் பிரியாவின் கைப்பையும் கிடைத்துள்ளது. குளத்தில் அமுக்கி பிரியா கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வன்னிய சாதி வெறிபற்றி முன்பே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டும் கொலை நடந்துள்ளது. கொலை செய்தவர்கள் வன்னியர்கள் என்பதும் அங்கிருப்பவர்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதில் விசித்திரம் என்னவென்றால் சிறுவத்தூர் வன்னியச் சரண்யாவிற்காக அல்லது காந்தளவாடி சிவகண்டனுக்காக சம்பந்தமே இல்லாத பிரியா படுகொலைச் செய்யப்பட்டது எந்த வித தர்க்கத்திற்கும் இடமில்லால் இருக்கிறது. கொஞ்சமும் மூளையோ யோசனையோ இல்லாமல் மட்டித்தனமாக வன்னியர்கள் படுகொலை செய்தது மனநோயாளியாக மாறிக் கொண்டிருக்கும் டாக்டர்.ராமராசுக்கும் அடியாள் காடுவெட்டு குருவிற்கும் அவரை பின்தொடரும் சீடர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கலாம்.

எப்படி பார்த்தாலும் இந்த மனநோயாளிகளை திருத்தும் அளவிற்கு இங்கு போதிய மருத்துவர்கள் இல்லை. கேவலம் என்னவென்றால் தலில் மக்களைத் தாக்கி கொள்ளையடித்த வன்னியர்களுக்கு மனநல மருத்துவ சிகிச்சைத் தருவதற்கு பதில் தருமபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதை பார்த்தால் இந்த அரசுக்கும் மனநல சிகிச்சைத் தேவைபடுகிறது.
எனினும் டாக்டர். ராமதாஸ் அவர்கள் தமது சாதி வெறி என்ற மனநோயை தணித்தக் கொள்ள நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது. இல்லையெனில் தலித்துகள் வைத்தியம் பார்க்கத் தொடங்கிவிட்டால் நல்லதில்லை டாக்டர்.

தமது சொந்த அரசியல் லாபகங்களுக்காக அப்பாவி வன்னியர்களின் சாதிப்பற்றை கொம்புசீவி முட்ட வைக்கும் கொடூரத்தை உமது மக்கள் உண்ர்ந்துக் கொண்டால் அவர்கள் ஏந்தும் ஆயுதம் உம்மை நோக்கியும் திரும்பலாம் டாக்டர். ஏனெனில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாக்டர்.ராமதாஸ் இப்போது இல்லை அவர் குடும்பத்தோடு வசதியாக செட்டிலாகிவிட்டார். இப்போது இருப்பவர் மனநோயும் தோற்றவனுக்கு உள்ள வெறியும் பிடித்தலையும் ஒரு தலைவன். அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும்போது வெறிபிடித்தத் தலைவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் கொம்பு சீவி விடுவது. இந்த ஆயுதம்கூட பலிக்காமல் போனால் லிபியாவின் கடாபிக்கு நேர்ந்த கதி உமது மக்களாலே உங்களுக்கு நேரலாம் டாக்டர்.. மனநோய் டாக்டர்.

Load More Related Articles
Load More By admin
Load More In Article
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …