Home Politics Events தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்

தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்

Comments Off on தருமபுரி சாதி வெறியாட்டம்.. தொடரும் கேள்விகள்

– புலிகளை மட்டும் அதரித்துக் கொண்டு தமது தமிழர் பற்றைக் காட்டிக்கொள்ளும் தமிழர்களே உங்கள் வேசத்திற்கு முன் ராசபட்சே மேல். அவன் பச்சையாக தன் இன வெறியைக் காட்டுகின்றான், நீங்களோ பசப்புத் தனமாக தமிழ்ப் பற்றைக் காட்டுகின்றீர்களா.?

– புலிகள் போராளிகள், ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடினார்கள்.. அவர்கள் இங்கிருந்தால் உங்களை எதிர்த்துத்தான் துவக்கை

 ஏந்தி இருப்பார்கள். உங்கள் புலிவேசம் தருமபுரி நெருப்பில் உருகி வழிகிறது.. அப்பட்டமாய் தெரியும் சாதி வெறியை எந்த வேசத்தையாவது கொண்டு மறைக்க முடியுமா..?

– தலைவர் திருமா அவர்கள் உண்ணாநோன்பிருந்து போரை நிறுத்தக் கோரியபோது நீங்கள் உண்ணா நோன்பை நிறுத்தக் கோரினீர்கள். போராட்டத்தை முடித்து வைத்த டாக்டர்.ராமதாஸ் திருமா அவர்களே நீங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும், இருவரும் இணைந்துப் போராடுவோம், மருந்துக் கடைகளைத் தவிர அத்தனைக் கடைகளும் அடைக்கப்டும். பால் வண்டியைத் தவிர அத்தனை வண்டிகளும் ஓடாதிருக்கும்படி ஒரு மாபெரும் போரட்டத்தை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ஓடிபோனதை நீங்கள் மறந்திருக்கலாம் ஆனால் சிறுத்தைகள் மறக்கவில்லை. ஓடி ஒளிந்து திட்டமிட்டதெல்லாம் இதற்காகத்தானா?

– டாக்டர்.ராமதாஸ் அவர்களே உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. பேரன் பேத்திகளெல்லாம் இருக்கிறார்கள். தமிழகத்தின் அதிகாரம் மிகுந்தக் குடும்பதில் ஒன்றாக உமது குடும்பம் இருக்கிறது. உங்கள் ‘குடும்பம் அதிகாரம் பெற அப்பாவி தலித்துகளின் உயிர்கள் பலியிட வேண்டுமா?

– தலித் உயிர்களை பலியிட அப்பாவி வன்னியர்களை ஏவி விட்ட உங்கள் சாதுரியத்தை உங்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுக்கு சொல்லி அனுப்பியிருந்தால் உங்கள் வன்னியச் சொந்தங்கள் கோபித்துக் கொள்வார்களா ? களத்திற்கு அப்பாவியான சாதி வெறிப் பிடித்த வன்னியர்கள்.. பங்கு போட்டுக் கொள்வதற்கு உங்கள் குடும்ப பந்தங்களா ?

– கடலுரில் ஒரு மேடைப் போட்டுக்கொண்டு சிறுத்தைத் தோழர்களின் தலைக்கு விலைவைத்து, தலையைக் கொண்டு வந்தால் லட்சங்களைப் பரிசாகத் தருவேன் என்று வாய் சவடால் விட்ட அடியாள் காடுவெட்டி குரு.. பால் குடிக்கும் குழந்தையின் கொலுசைக் கூட விடாமல் திருட வைத்ததுதான் இந்த மாவீரனின் சாதனையா ?

– சாதி வெறியர்களே.. புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னார் சாதி இந்துக்கள் மனநோயளிகள் என்று. உங்கள் மனநோய் எந்த அளவிற்கு முற்றிப்போய் இருக்கிறது பாருங்கள்.. இந்தியா தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்று சாதித்தமிழர்களே.. நீங்கள் இருப்பது தேசிய இனத்தின் சிறைக்கூடத்திலா இல்லை இல்லவே இல்லை.. இந்தியா எனும் மனநோய் காப்பகத்தில்.. இந்தியா முழுவதும் உள்ள சாதி இந்துக்களின் குடியிறுப்புகள் மனநோயாளிகளின் குடியிறுப்புகள்.. உங்கள் முற்றிய மனநோயின் வெறியாட்டத்தைத் தருமபுரியில் காட்டும்போது மற்ற மனநோயளிகளெல்லாம் மகிழ்ச்சியாய் வேடிக்கைப் பார்த்தீர்களா ?

எங்கே நடக்கிறீர்கள் கலிங்கம்பட்டி சிங்கம் வைகோ அவர்களே.. ராசபட்சே இலங்கையில் மட்டும் இல்லை தமிழகத்திலும் இருக்கிறான்.. தருமபுரியில் மட்டுமல்ல ஒவ்வொரு ஊர் பகுதியிலும் இருக்கிறான்.. எங்கே இப்போது நடங்கள் பார்க்கலாம். உங்கள் மனக்குகையில் தருமபுரி மக்களின் அவலம் கேட்கிறதா..?

கேப்டன் அவசரம்.. பாகிஸ்தானிலிருந்து உடனே இங்கே வாருங்கள்.. உங்களுக்கு வேலை வந்துவிட்டது. தீவிரவாதிகளை தேடி நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள். தருமபுரிக்கு வாருங்கள்.. வரமுடியுமா.. வந்தால் சாதித் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள் பார்க்கலாம்.. துப்பாக்கித் தயார் தானே..?

செந்ததமிழன் அவர்களே.. சேரித் தமிழனைத் தெரியுமா.. உங்கள் உள் மனதில் இருக்கும் கோத்தபயவை கொன்றுவிட்டு வன்னிய பட்சேக்களை வதைக்க முடியுமா.. முகநுலில் முழக்கமிடும் உமது பட்டாளம் எங்கே சத்தத்தையே காணோம்.. நாறிப்போன அந்த நடுத்தர வர்க்கத்தின் சைபர் வீரத்திற்கு வடிகால்தானே நீங்கள்.. ?

புலம் பெயர்ந்தத் தமிழர்களே உலகில் நீங்கள் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்.. உங்களை ஆதரித்த பாவத்திற்காக உங்களை ஆதரிக்கும் சாதி இந்துக்கள் செய்த வெறியாட்டத்தை பாருங்கள்.. இவர்களை ஒடுக்க நீங்கள் மனித வெடி குண்டாக மாறக் கோரவில்லை உங்கள் மனசாட்சியை திறக்கக் கோருகிறார்கள் தருமபுரியில் பாதிக்கப் பட்ட தலிதுகள்.. உங்களிடம் மனசாட்சி இருக்கிறதா..? சாதி வெறியர்களை உலக நாடுகளின் முன்பு உங்களால் அம்பலப் படுத்த முடியுமா..?

Load More Related Articles
Load More By admin
Load More In Events
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …