Home நிகழ்கால அரசியல் சமூக அரசியல் நிகழ்வுகள் கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

Comments Off on கொளுத்தப்பட்ட மேலிருப்பு தலித் குடியிருப்பு.

தொடரும் குச்சி கொளுத்திகளின் கைவரிகை

குச்சிக்கொளுத்தி வைத்தியரும் அவரது அடியாட்களும் தருமபுரியில் காட்டிய கொள்ளை, தீவைப்பு ருசியை விடாத வன்னியர்கள் கடலூரில் கைவரிசையைக் காட்டத் தொடங்கினார்கள். பொதுச் சமூகத்தின் முன் தாம் ஒரு மோசமான குற்றவாளிகளாக தோற்றம் அளிக்கிறோமே என்று அப்பாவி வன்னியர்களும் கவலைபட்டுக் கொண்டிருக்கும் அவலத்தைப் போக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக வெட்கங்கெட்டுப்போய் சத்திரியர்களின் வீரம் என்று பெருமைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும்.. மேலும் அவலத்தையும் அசிங்கத்தையும் தமது சமுகத்திற்கு சேர்த்துத் தரும் கொடுரமான செயல்களை விட்டுவிட்டு, தம்மை திருத்திக் கொள்ள எந்த முயற்சியையும் செய்ததாகத் தெரியவில்லை அந்த குச்சிக் கொளுத்தி வைத்தியரை பின்பற்றும் கூட்டத்தினர்.

பொங்கல் திருநாள் உழவர்களின் திருநாள். உழைக்கும் மக்களின் திருநாள். அதை தமிழர் திருநாளாக கொஞ்சம் காலமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் உண்மையில் உழைக்கும் மக்களின் திருநாளான பொங்கல் உழவனுக்கு துணையிருக்கும் மாடுகளையும் கால்நடைகளையும் போற்றும் ஒரு நாளையும், நாளெல்லாம் உழைத்து வெளியுலகத் தொடர்பை இழந்திருக்கும் உழைப்பாளிக்கு வெளியுலகைக் காட்டும் ஒரு உயர்ந்த நாளாக காணும் பொங்கல் இருக்கிறது. ஆனால் அந்த நாளைக்கூட தமது சாதி வெறியைக் காட்டும் நாளாக சாதி வெறியேறிய சில வன்னியர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கும்போது குச்சிக்கொளுத்தி வைத்தியர் வைத்த விஷம் எவ்வளவு தூரம் வேலை செய்கிறது பாருங்கள். ஆம் இன்று (16.01.2013) ஒரு தலித் குடியிருப்பைக் கொளுத்தியிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உள்ளது மேலிருப்புக் கிராமம். கொஞ்சம் பெரிய கிராமம்தான். கெடுவாய்ப்பாக சேரிக்கு அருகில் தமிழக அரசு மக்களை குட்டிச்சுவராக்கும் டாஸ்மாக் கடையைத் திறந்துள்ளது. இந்த கடைக்குத்தான் ஊரில் இருக்கும் வன்னியர்கள் வந்து குடித்துவிட்டுப்போக வேண்டும். ஆனால் அவர்களுக்கு குடித்து அழிந்தால்கூட தமது  ஊர் பகுதியிலேயே அழிய வேண்டும் என்பது நீண்ட நாள் போதையாக இருந்திருக்கிறது. சேரி பக்கம் வந்து குடித்துவிட்டு போவதை அவர்கள் அவமானமாகவே கருதி வந்திருக்கிறார்கள்.

காணும் பொங்கல் அவர்களுக்கு அந்த ஏக்கத்தை தீர்க்கமா என்ன? ஆனால் டாஸ்மாக் சேரிப்பக்கம் இருப்பதால் சேரியை ஒழித்துவிட்டால் தமது எண்ணம் ஈடேறிவிடும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியல்லை..

இன்று மாலை 4 மணியளவில் குடிக்கப்போன வன்னியர்கள் அங்கிருந்த தலித்துகளுடன் தகறாறில் ஈடுபட்டு தமது சாதி வெறியைக் காட்டியிருகிறார்கள். ஆனால் தலித்துகள் அவர்களின் ஆணவத்தினை ஏற்க வில்லை எதிர்த்திருக்கிறார்கள். தகறாறு தொடங்கியிருக்கிறது. ‘பின் முடிந்துப் போயிருக்கிறது.. அப்படி நினைத்ததுதான் தலித்துகள் செய்த தவறு.. ஏனெனில் தருமபுரியில் ருசி பார்த்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சிறித நேரத்திற்கெல்லாம் 500 பேர் கொண்ட கும்பல் மேலிருப்புக் கிராமத்தின் சேரி மீது படையெடுத்துள்ளது.

வரும் கூட்டத்தைக் கண்டு தலித்துகள் சுதாரிப்பதற்குள் சாலையோரம் இருந்த 6 வீடுகளை தீ வைத்து கொளுத்தியுள்ளனர் சாதி வெறியர்கள். அதோடு விடாமல் வசதியானவர்கள் வசிக்கும் ஓட்டு வீடுகளைப் பார்த்து அடித்து நொறுக்கியுள்ளனர், அவர்களின் தாக்குதலில் 11 ஓட்டு வீடுகள் முற்றிலும் நாசிமாகிப் போயின. வன்னியர்களின் தாக்குதலை எதிர் கொண்ட தலித்துகள் 6 பேர் கடுமையாக தாக்கப்பட்டு இப்போது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பேருக்கு காயமேற்பட்டுள்ளது.

அவர்கள் வெறியோடும், பெரும் திட்டத்தோடும் வந்து தாக்கியதை தலித்துகள் முறியடித்துள்ளனர். போன வாரமே தலித்துகளின் குடியிருப்புகள் தாக்கப்படும் என்ற பேச்சு பரவலாக இருந்து வந்த நிலையில் அதை இப்போது சாதி வெறிபிடித்த வன்னியர்கள் உண்மையாக்கியுள்ளனர். எனவே இது திட்டமிடப்பட்ட செயல் என்பது தெரிகிறது, அதனால்தான் உடனடியாக அவர்கள் 500 பேரைத் திரட்ட முடிந்திருக்கிறது. தருமபுரியில் கிடைத்ததைப் போன்ற பணமும் பொருளும் கிடைக்கும் என்று வந்தவர்கள் வெறும் கையோடு போயிருக்கிறார்கள் என்று நிம்மதியடைய முடியாது. ஆனால் அவர்கள் வேறு ஒரு கிராமத்தை தாக்கி கொள்ளையடிக்கத் திட்டமிடலாம்.

ஆயினும் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காடாம்புலியூர் காவல் நிலையம் தலித்துகளுக்குப் பாதுகாப்புத் தரும் என்று நம்ப முடியாது. ஏனெனனில் தருமபுரியில் காவல்துறையினரின் முன்னிலையில்தான் குச்சி கொளுத்தி வைத்தியரின் வன்னியர்கள் கொள்ளையடித்தார்கள். காவல் துறையினர் நன்றாக வேடிக்கைப் பார்த்தார்கள். எனவே காவல் துறையினரை நம்புவதைவிட தமது பலத்தை நம்புவதே தலித் மக்களின் எண்ணவோட்டமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டு தமது விஜயத்தை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கும் குச்சிக்கொளுத்தி வைத்தியரை கடலூரி நுழைய விடாமல் தடுத்தால் மட்டும் போதும் என்று நினைக்கத் தோன்றவில்லை. அவரை எந்த நாட்டுக்குக் கடத்தினாலும் அவர் அந்த நாடு பாழாகப் போய்விடும். எனவே யாராவது அவரது சாதிக்காரர்கள் அவரை திருத்தப் பாருங்கள், அல்லது சட்டம் தன் கடமையை செய்யும் சூழல் வந்தால் என்னாவது. ஆகாது என்று அவர் நம்பும் வரை இது தொடரத்தானே செய்யும்….

Load More Related Articles
Load More By admin
Load More In சமூக அரசியல் நிகழ்வுகள்
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …