Home படைப்புகள் கவிதைகள் பிழைத்தவன் பிழைப்பு…

பிழைத்தவன் பிழைப்பு…

Comments Off on பிழைத்தவன் பிழைப்பு…

பிறப்பது ஒரு வேலையா
இறப்பது ஒரு வேலையா
வாழ்வதுதான் ஒரு வேலையா
வேலையாய் மாறின பிறகு
வேலை மட்டும்தானே வாழ்வு!

ஆண்டுகள் மாதங்கள்
வாரங்கள் நாட்கள்
மணிகள் நிமிடங்கள்
கடைசியாய் நொடிகள்
எல்லாம் ஆள் காட்டிகள்..!

ஊடாட்டம்.. ஊடாட்டம்..
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையிலா ?
நொடிக்குள் இடைவெளி
ஊடாட்ட பெருவெளி
தப்பிக்க முடியுமா…?

காரணங்கள் மறைந்து
காரியங்கள் மீந்த
கணங்களை எண்ணுவது
பிணங்களை எண்ணுவது
பிழைத்தவன் மட்டுமே
செய்யத் துணிவது…!

எல்லோருக்கும் தெரிந்த
எல்லோருக்கும் புரிந்த
உண்மையைச் சொல்வது
பெரும் சாகசம்…!
நல்ல வேலை சொன்னவன்
யாரும் உயிராய் இல்லை..!

பிறந்தவுடன் இறந்துப்போனாய்
வாழ்வது என்ன
அடுத்தவன் வாழ்க்கைத் தானே..
வேலை… பிழைத்தாய்…!

 

Load More Related Articles
Load More By admin
  • வெண்மணி – வீரவணக்கம்

    சீறியக் கள்ளத் துவக்குகளின் குண்டுகள் துரத்திவந்த சாதிவெறிக் குண்டர்கள் வேடிக்கைப் பார்த்த…
  • படைப்புகள்

    சோதனைப் பதிவு …
Load More In கவிதைகள்
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …