Home நிகழ்கால அரசியல் சுற்றுச்சூழல் குச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,

குச்சிக் கொளுத்தி வைத்தியர் டாக்டர்.ஈடிபஸ் என்றான கதை,

2

கொஞ்சம் ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். இந்த         தலைப்பை மட்டிப் பயல்களெல்லாம் புரிந்துக்கொள்ள முடியாது என்பதால் 

oedibus 2விளக்கமாகத்தானே பார்க்க முடியும். கிரேக்கத் துன்பியல் நாடகத்தில் மிக முக்கியமான கதை ஈடிபஸ் ரெக்ஸ் என்ற நாடகம், அந்த நாடகம் பின்வருமாரு விரிகிறது.

தீப்ஸ் என்ற நாட்டிற்கு லயஸ் என்பவன் அரசனாக இருந்தான். அவனுக்கு ஜொகாஸ்ட்டா என்பவள் மனைவியாக, அரசியாக இருந்தாள். இவளது வயிற்றில் தனது கணவன் மூலம் ஒரு குழந்தை உண்டானது. அந்த குழந்தை எப்படி இருக்கும் என்று கோவிலில் உள்ள ஆரக்கிள் என்ற தெய்வத்திடம் கேட்டபோது அந்த தெய்வம் “ பிறக்கப்போகும் குழந்தை ஈடிபஸ் ரெக்ஸ் என பெயர்பெறும், அது தன் தந்தையை கொன்றுவிடும், அதிகாரத்தைக் கைப்பற்றி பின்பு தன்னுடைய தாயை மணந்துக் கொள்ளும்” என்று ஆருடம் கூறியது. அதனால் பயந்துப்போன நாட்டு மக்கள் குழந்தைப் பிறந்த உடனேயே அதை நாடு கடத்தி விடுகின்றனர். நாட்டை விட்டுப்போனக் குழந்தை ஈடிபஸ் என்ற பெயரோடு வளர்ந்து பெரியவனாகி அலைந்து திரிகிறது. தரிகெட்டுத் திரிந்த ஈடிபஸ் ஆரகிள் தெய்வத்திடம் போய் தனது விதியைக் கேட்கிறான் அது உண்மையை சொல்லி விடுகிறது. 

பிறகுoedibus 1 விதியை நினைத்துக்கொண்டே திரிந்தவன் ஒரு மலையில் ஒருவனை சந்திக்கிறான், ஆனால் அவனோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவனுடன் சண்டையிட்டு அவனை கொன்றுவிடுகிறான். அப்படிக் கொல்லப்பட்டவன் அவனது தந்தை என்பதை அவன் அறியவில்லை, பிறது தீப்ஸ் நாட்டைத் துன்புறுத்தி வந்த ஸ்பிங்ஸ் என்ற மிருகத்தை கொல்கிறான், அதனால் மகிழ்ந்த தீப்ஸ் நாட்டு மக்கள் அவனை அந்நாட்டுக்கு அரசனாக்கி விடுகின்றனர். கூடவே அரசியையும் அவனுக்கு மணம் முடித்து வைக்கின்றனர். ஈடிபஸ் மணந்துக் கொண்டது அரசியாய் இருக்கும் அவனது அம்மாவை. அரசியல் அதிகாரத்தை அடைந்து தனது அம்மாவிடம் சோரம் போன ஈடிபசுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் பிறக்கின்றனர்.

திடீரென தீப்சு நாட்டில் கொடிய வியாதி பரவுகிறது. மக்கள் மடிகின்றனர். அதன் காரணத்தினை ஈடிபசால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே ஆரகிள் தெய்வத்திடம்போய் ஆருடம் கேட்கிறான். அது நீ உன் தாயை மணந்து சோரம் போனதால்தான் இந்தத் தீமை உன் நாட்டிற்கு வந்தது என்று உண்மையை சொல்லிவிடுகிறது. அதைத் தாங்க முடியாத ஈடிபஸ் தனது கண்களைக் குத்திக் குருடாக்கிக் கொண்டு, நாட்டை விட்டு வெளியேறுகிறான்.

நம் நாட்டில் ஒரு புதிய ஈடிபஸ் சில ஆண்டகளுக்கு முன்பு, செயலலிதாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் தமது அம்மாவிடம் சோரம் போனதாக அர்த்தம் என்று தனது மக்களுக்குச் சொன்னார். பின்பு தனது வார்த்தையை மறந்து செயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் அப்படியானால் அதற்கு என்ன பொருள். தமிழகத்தில் ஈடிபஸ் என்ற கிரேக்கப் பாத்திரம் உயிர்த்தெழந்தார் என்று பொருள். நமது நாட்டில் இப்போது கொடுமையான சாதி வெறி எனும் மனநோய் பரவிக் கொண்டிருக்கிறது அது யார் செய்த பாவம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த வரலாற்றை அறியாத அப்பாவிகள் அவரது கூச்சலைக் கேட்டு 25/04/2013 சித்ரா பௌர்ணமி அன்று மல்லையில் கூடி மங்களம் பாடி இருக்கிறார்கள். போகும் வழியில் தமது பரம்பரை வீரத்தைக் காட்ட பீர் பாட்டில்களோடு பேருந்துகளில் அட்டகாசம் புரிந்தார்கள். தலித் மக்களின் குடிசைகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தமது வீரத்தை நிருபித்தார்கள். நேருக்கு நேர் நின்று மோதும் பழக்கம் இல்லாதால் காயடிக்கப்பட்ட காளைகளைப் போல நடந்துக்கொண்டார்கள். இவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது, இவ்வளவு மட்டிப் பயல்காளாக இருப்பதைக்கூட இவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையே என்பதை நினைத்துத்தான் பரிதாபம் கூடுகிறது. நாய்க்கு வெறி பிடித்தால் கண்டதையெல்லாம் கடிக்கும். அப்படி கடிக்கும்போது அதன் வாயில் ரத்தம் வந்தால் தான் கடிக்கும் பொருளிலிருந்துதான் ரத்தம் வருகிறது என்று நினைத்து இன்னும் உக்கிரமாகக் கடிக்கும். தனது ரத்ததையே ருசித்துக் குடித்து உடம்பில் ரத்தம் வற்றிப்போய் பிறது செத்துவிடும். சாதி அப்படிப்பட்ட வெறி என்பதை டாக்டர்.ஈடிபஸ் தனது ரத்தங்களுக்கு சொல்வதற்கு முன்பு தனக்குத்தானே ஒரு முறை சொல்லிக்கொள்வது நல்லது.

-சன்னா

 

Load More Related Articles
Load More By admin
Load More In சுற்றுச்சூழல்

2 Comments

  1. Vijay Gopalswami

    April 27, 2013 at 10:25 am

    நாகரிகத்திலிருந்து கற்காலத்துக்குத் திரும்புகிற ஒரு கூட்டமும் இருக்க முடியுமா ?

    சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் போகிற வன்னியக் கூட்டம் குவாலிசிலும் சுமோவிலும் வெளியே தொங்கியபடி அரிவாள்கள், பட்டைக் கத்திகளைக் காட்டிக் கொண்டு சென்றதையும் 2003ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறேன். நாகரிகத்திலிருந்து கற்காலத்துக்குத் திரும்புகிற ஒரு கூட்டமும் இருக்க முடியுமா என்று வியந்தது அப்போது தான். அதற்கு அடுத்தாற்போல ஐ.ஜே.கே. கட்சியின் மாநாடு தஞ்சாவூரில் நடந்த போது உடையார்கள் சற்றொப்ப வன்னியர்களை நெருங்கும் விதமாக நடந்து கொண்டனர்.

  2. vtjeevani

    May 12, 2013 at 11:25 am

    உண்மைதான் அண்ணா தமிழ் நாட்டின் ஈடிபஸ்..விரைவில் தன் கண்களை குத்திக்கொல்வார்…..

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …