விவசாயி கஜேந்திர சிங் தூக்கிலிடப்பட்டார்.
டில்லியில் நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சி பேரணியில் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கஜேந்திர சிங் என்கிற ஒரு விவசாயி மரத்தில் தூக்கிட்டு இறந்தார் என்கிற செய்தி உலுக்கிவிட்டது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 4500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்துள்ளனர். அதை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்தும் விதமாக அமைந்ததுதான் கஜேந்திர சிங் அவர்களின் தற்கொலை மரணம். இப்படிப்பட்ட தற்கொலைகளை கண்டுக்கொள்ளலாமல் கார்ப்ரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்காக அரசு நடத்தியதால்தான் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்பட்டது.
ஆனாலும் அவராவது பத்து ஆண்டுகள் தாக்குபிடித்தார், ஆனால் மோடிக்கு அவ்வளவு காலம் ஆகாது எனத் தோன்றுகிறது. •விவசாயிகள் தனித்து விடப்படவில்லை• என்று தனது வழக்கமான வசனங்களை பேசுவதை தவிர அவரால் விவசாயிகளுக்கு ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் தனித்துவிடப்படவில்லை, மொத்தமாக தூக்கிலிட்டுக் கொள்ளுங்கள் என்பதுபோல கார்ப்ரேட் முதலாளிகளுடைய ஏஜென்ட்டான மோடி நிலப் பறிப்பு மசோதாவில் தீவிரமாக இருக்கிறார்.
அரிசியை டவுன் செய்ய முடியாது என்பதைப் போல அதை ஆலைகளில் உற்பத்தியும் செய்ய முடியாது மோடி. உங்களுக்கு வேண்டுமானால் அம்பானியும் அதானியும் சோறாக்கிப் போடலாம். ஆனால் விவசாயி மனது வைத்தால்தான் மற்ற யாருக்குமே சோறு..
டில்லியில் இந்தியாவின் மானத்தை கப்பலேற்றிய கஜேந்திர சிங் மிகுந்த தைரியசாலி. தன் சாவை நேரடியாக சந்தித்து மோடி அரசையும் சேர்த்து இந்தியாவை சந்தி சிரிக்க வைத்துவிட்டார். . எச்சரிக்கை மோடிக்கு மட்டுமல்ல மவுஸ் பிடிக்கும் எல்லோருக்கும்தான்.
விவசாயியை காக்காத எந்த அரசும் நரகத்திற்குத்தான் போக வேண்டும்.