Home Dalit History சேரி சாதி தீண்டாமை – 9

சேரி சாதி தீண்டாமை – 9

Comments Off on சேரி சாதி தீண்டாமை – 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்..

– கௌதம சன்னா

சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் குடியிறுப்பு நிலீமீttஷீ, இந்த இரண்டு சொற்களும் தமிழக்த்திற்கு புதிதானவை. ஆனால் சேரி என்ற பொருளில் நெடுங்காலம் நிலவி வருபவை. தமிழைப் பொறுத்தவரையில் சேரி என்பது பொதுச் சொல், அது குறிப்பிட்ட சாதிக்கானதும் அல்ல.. எனவே தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்கள் வசிக்கும் குடியிறுப்பையும் சாதி இந்துக்கள் வசிக்கும் குடியிறுப்புகளையும் ஒப்பு நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இனி அம்பேத்கரின் ஆய்வில் உள்ள இணக்கங்களையும் இடைவெளிகளையும் வரிசைப்படுத்திக் கொள்வோம்.

  1. அம்பேத்கரின் ஆய்வில் அவர்க கையாண்ட முறை அன்றைய காலத்திய ஆய்வு முறையாக இருந்த மேற்கத்திய ஆய்வு முறை. ஆயினும், அம்பேத்கர் அடிப்படையில் ஒரு மானுடவியல் மாணவர் மற்றும் ஆய்வாளர். கூடுதலாக அம்பேத்கர் மானுடவியல் மட்டுமின்றி பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளராக கடும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். சொல்லாப்போனால் பண்பாட்டு மானுடவியலின் இந்திய நிறுவனர் என்று அம்பேத்கரை சொன்னால் அது தவறாகிவிடாது. மேலும், மானுடவியல் ஆய்வின் அடிப்படையில்தான் உலகலாவிய மனித இன குடியேற்றப் போக்கு சாத்தியப்படுத்திய அமைப்பினை முன்னிருத்தி சேரிகள் உருவாக்கத்தினை அம்பேத்கர் கண்டடைந்தார். அதன்படி கிராம அமைப்பு இரண்டாக தொடக்கம் முதலே இருக்கிறது என்பது அவரது கணிப்பு. அதற்கு அவர் கொடுத்த இரண்டு உதாரணங்கள் போதுமானதாக இல்லை என்பது ஒரு குறையாக இருக்கிறது. பண்டைய சமஸ்கிருத இலக்கியச் சான்றையும், மகர் குடியிறுப்பு பற்றின சான்றையும் தந்துள்ளார். அதில் மகர் பற்றின உதாரணம் மிக அண்மைகாலத்தை சேர்ந்ததாக இருப்பதால் அதை வரலாற்றுக்கு முந்திய காலத்தோடு ஒப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது, இது கடக்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி… (காண்க முந்தைய கட்டுரை)
  2. தமது நூலில் அம்பேத்கர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது இந்தோ ஆரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைந்த சமூக அமைப்பினைத்தான். அதாவது பண்டையக் காலத்து வடஇந்திய சமுக அமைப்பினை. தென்னிந்திய சமூக அமைப்பு பற்றி அவர் தமது ஆய்வில் குறிப்பிடவில்லை. இது ஓர் இடைவெளியாகவே நிற்கிறது.
  3. அவர் தமது தீண்டத்தகாதவரகள் நூலில் கிராமம் என்பதை இரட்டை அலகாக மட்டும் எல்லையாக வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டார். எனவே அதற்கான புதிரை மட்டுமே அவர் விடுவித்தார். ஆனால் இந்திய கிராம அமைப்பு பொதுவாக நோக்கும்போது இரட்டை அலகாக காணப்பட்டாலும், அந்த இரட்டை அலகிற்குள் பல பிரிவுகளாக குடியிறுப்புகள் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி வேறு சில கட்டுரைகளில் அவர் ஆராய்ந்திருக்கிறார். எனவே அவற்றை இணைத்துப் பார்க்க வேண்டும்.
  4. கிராம அமைப்பின் பரிணாம வளர்ச்சி மற்றும் பலவாறாக பல்கிப் பெருகிய காரணங்கள் ஒற்றைத் தன்மையோடு இருக்கவில்லை. வரலாற்றின் பல கட்டங்களில் அது பலவாறாக உருமாறியிருக்கிறது. வர்ண அமைப்புகள், சாதிப் பிரிவினைகள், மத அமைப்புகளின் தோற்றம் மற்றும் பரவல், அரசுகளின் மாற்றம், « பண்டைய நகர அமைப்புகள் உருவான போது சேரிகளின் தன்மை மற்றும் தற்கால நகர உருவாக்கங்களின்போது சேரிகளின் வளர்ச்சிப் போக்கு ஆகியன அம்பேத்கரின் ஆய்வில் வேறு பல நூல்களில் சான்றுகளைக் கொடுத்திருக்கின்றார். அவற்றைக் கொண்டு அந்த இடைவெளியை நிரப்ப இனி அவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். இருந்தும் அவற்றில் தென்னிந்தியா பற்றின தரவுகள் குறைவே எனவே அவற்றை நமது ஆய்வில் பார்க்க வேண்டும்.
  5. பின்னாளில் சேரிகள் மீது தீண்டாமை என்பது சுமத்தப்பட்டாலும், அவர்கள் அடிப்படையில் ஒரு போர் குடிகளாக தமது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்கள் என்று அம்பேத்கர் அவதானித்திருக்கிறார் அப்படியெனில் அவர்கள் தம்மை ஆளும் வர்க்கமாக எப்போதாவது மாறியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் அவர்கள் தமது குடியிறுப்பு அமைப்பை எவ்வாறு மாற்றி இருப்பார்கள் என்பதை இனி கணக்கில் எடுக்க வேண்டும். அது குறித்த சில குறிப்புகளை அம்பேத்கர் தந்திருக்கிறார். அந்த குறிப்புகள் பெரும் வெளிச்சத்தை உருவாக்கம் சிறு பொறிதான். பார்க்கலாம்.
  6. பல மொழிகள் உருவான இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தப் பிரிவினைகள் எவ்வாறு பண்பாட்டு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. அல்லது அவை எவ்வாறு புதிய பெயர்களை எடுத்துக் கொண்டன.
  7. சேரிகள் உருவான காலத்தில் ஒரு சிறு அலகாக தோன்றி, மக்கள் தொகைப் பெருக்கத்தின்போது அந்த அமைப்பு முறை தவறாமல் கடத்தப்பட்டதற்கான காரணம். மக்கள் தோகை அளவீடு மற்றும் பெருக்கம்..
  8. ஆரியர், நாகர், தமிழர் மற்றும் திராவிடர் ஆகிய இனப், பிரிவுகள் இதில் எவ்வாறு அணுகப்பட வேண்டும்.

  9, சேரி என்ற குடியிறுப்பானது முறையே வர்ண அமைப்பு, சாதியமைப்பு, மதங்களின் பிரிவுகள் பெருகியபோது, அரசுகள் உருவானபோதும், அவை உருமாற்றம் அடைந்தபோதும் எவ்வாறு மாற்றம் அடைந்தன போன்ற விவரங்களை பார்க்க வேண்டும்.

  1. தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் கடைபிடித்த தீண்டாமை முறைகள், அது எந்த சமூக பிரிவினர்களின் மீது அவர்கள் கடைப்பிடித்தனர்.
  2. சாதி இந்துக்கள் வசிக்கும் பகுதியானது ஆளுமை செலுத்தும் பகுதியாக மட்டுமே எப்போதும் நிலவி வந்ததா, அல்லது அவர்களும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் தமது சமூகத் தகுதியை இழந்த சந்தர்ப்பங்கள் இருந்திருக்க வாய்ப்பிருக்குமா ?. சாதி இந்துக்களின் குடியிறுப்பில் உள்ள பிரிவுகள் தமது எல்லையை எவ்வாறு வரையறுத்துக் கொண்டன, அவற்றிற்கு இடையே உள்ள தூரத்தின் இடைவெளிகள் திசைகள் எதைக் குறித்தன. அவைகளுக்குள் ஏதாவது தீட்டு அல்லது தீண்டாமை வடிகங்கள் நிலவியதா என்பதைப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட கேள்விகளெல்லாம் அம்பேத்கரின் நூலினை பயின்றதனால் உருவானவை. எனவே இவை சேரியின் தோற்றம் மற்றும் பரவல் பற்றின் தெளிவை நமக்கு அளிக்க வல்லவை.

எனினும் அம்பேத்கரின் ஆய்வு முறையின் மீது பல குறைபாடுகள் சொல்லப்படுவதை அண்மைக் காலமாக கவனிக்க முடிகிறது. சேரிகள் அல்லது தலித்துகளின் குடியிறுப்புகள் உருவானதற்கான கல்வெட்டுகள், இலக்கிய, மற்றும் புராண சான்றுகளை ஏன் அம்பேத்கர் குறிப்பிடவில்லை. அதனால் அது ஆதாரமற்றதாக இருக்கிறதே என்று குற்றச்சாட்டாககூட வைக்கப்படுகிறது. இதை எப்படி எதிர் கொள்வது. அதற்கான விடையை பின்வருமாறு விளங்கிக் கொள்ள வேண்டும்.

முதலில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தினை ஆய்வு எப்படி செய்கிறார்கள் என்பதை பார்ப்போம். அக்காலக் கட்டத்தை ஆய்வு செய்யும் போது கிடைக்கின்ற சான்றுகள் பெரும்பாலும் மண்ணுக்குள் புதையுண்டவை பெரும்பாலும் கிடைக்கின்றன. அதாவது அவை அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைப்பவை. அதில் குகை ஓவியங்கள், புதைப் பொருள்கள், புதைப் படிவங்கள், சுடுமண் சிற்பங்கள், பாண்டங்கள் உள்ளிட்ட பல பொருள்கள் அடக்கம். ஆனால் அவற்றைக் கொண்டு வரலாறு நிகழ்ந்தக் காலத்தினையும், ஒரு சிதைந்த சமூக சித்திரத்தையும் உருவாக்கிக் கொள்ளலாமே தவிர முழுமையான அமைப்பினைப் பெற முடியாது. அதற்கு என்ன மாற்று வழி என்று யோசித்த போதுதான், உலகில் நிகழ்காலத்தில் நிலவும் பண்டைய சமூக எச்சங்களைக் கொண்டு வாழ்ந்து வரும் சமூகங்களை ஆயும் முடிவிற்கு அறிஞர்கள் சென்றார்கள். அதில் முக்கியமானது மானுடவியல் ஆய்வுகள்.

அந்த ஆய்வின்படி. தற்கால உலகில் நிலவும் நவீன நாகரீகங்களைப் பற்றி எந்தவிதமான அறிமுகம் இல்லாமல், தாம் வாழும் வாழிடத்திற்கு அப்பால் ஒரு வளர்ந்த சமூகங்கள் இருக்கின்றன என்கிற எண்ணம்கூட இல்லாமல், காடுகளில் தனித்து வாழ்க்கின்ற சமூகங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றனர்.. மார்கன், டார்வின் உள்ளிட்ட பலரும் அதைத்தான் பின்பற்றி இருக்கிறார்கள். அப்படி பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு காடுகளில் வாழும் மக்களைக் கண்டபிறகு அவர்கள் வரலாற்றின் எந்தக் கட்டத்தில் இருக்கின்றார்கள் என்பதை அவதானிக்க முடியும். அப்படி பல்வேறு குழுக்களை ஆய்வு செய்யும் போது கிடைக்கின்ற பண்பாட்டு மற்றும் வாழ்நிலைச் சான்றுகளைக் கொண்டுதான் மானுடவியல் ஆய்வாளர்கள் ஒரு பின்னோக்கிய படிநிலை உருமாற்ற வரலாற்றைக் கண்டடைகிறார்கள். அவர்களுக்கு தற்காலம் கிடைக்கின்ற கல்வெட்டுகளோ அல்லது அரசர்கள் காலத்தில் கிடைக்கின்ற ஆவணங்களோ அதற்கு அவ்வளவாக உதவுவதில்லை. பண்டைக்கால சமுகங்களில் எச்ச மிச்சங்களைக் கொண்டு மட்டுமே அனுமானிக்கக்கூடிய வரலாற்று ஆய்வு இது. இந்த ஆய்வு முறையின் மீது விமர்ச்சனங்கள் வைக்கப்படலாம், ஆயினும் அக்காலத்தில் வேறு வழியில்லை. ஆனால் அப்படியான கடும் ஆய்வுகளுக்குப் பிறகு மனித குலம் கண்டடைந்த உண்மைகளை பிற்காலத்திய அறிவியல் வளர்ச்சி பெருமளவில் உண்மை என உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அம்பேத்கர் பின்வருமாறு கூறுகிறார்.

தொன்னெடுங் காலத்திற்கு முந்திய தோற்றுவாயைக் கொண்ட ஓர் அமைப்பைப் பற்றி நாம் ஆராய்கிறோம் என்பதை என்னை விமர்ச்சிப்பவர்சள் மறந்துவிடக்கூடாது. தீண்டாமையின் தொற்றத்தைப் பற்றி விளக்கும் இப்போதைய முயற்சி திட்டவட்டமான விவரங்களைத் தரும் மூலாதாரங்களிலிருந்து வரலாற்றை எழுதுவது போன்றதல்ல. எத்தகைய மூலாதாரங்களும் இல்லமலேயே வரலாற்றைப் புனைந்தியற்றும் முயற்சி இது. அப்படி மூலாதாரங்கள் கிடைத்தாலும்கூட அவற்றுக்கும் சம்பந்தப்பட்ட விசயத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இருக்காது. இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஒரு வலராற்றாசிரியர் என்ன செய்ய வேண்டும்? இந்த மூலாதாரங்கள் எதை மறைக்கின்றன அல்லது திட்டவட்டமான முறையில் உண்மையைக் கண்டறியாமலேயே அவை எவ்ற்றை சூசகமாகக் கூறுகின்றன என்பதை அவர்கள் முன்னுணர வேண்டும். இந்த அடிப்படையில் அவர்கள் கடந்தக்கால மிச்ச சொச்சங்களை, மரபெச்சங்களைச் சேகரிக்க வேண்டும், அவற்றை ஒன்றிணைத்து அது பிறந்தக் கதையைச் சொல்லும்படி செய்ய வேண்டும். இந்த பணி உடைந்தக் கற்களிலிருந்து அங்கருந்த நகரை நிர்மாணிக்கும் ஒரு தொல்பொருள் ஆராய்கியாளரின் பணியைப் போன்றது. இந்தப் பணி சிதறிக் கிடக்கும் எலும்புகளையும் பற்களையும் கொண்டு மரபற்று ஒழிந்துப் போன ஒரு தொண்மைக்கால விலங்கை  உருவகித்துக் காணும் ஒரு புதைப்படிவ ஆய்வாளரின் பணியைப் போன்றது. இந்த பணி தொடுவானத்தின் கோடுகளையும், குன்றுக் சரிவுகளையும் சாயல்களையும் அப்படியே மனதில் படம் பிடித்துக் கொண்ட ஓர் அற்புதமான இயற்கைக் காட்சியை வரையும் ஓவியரின் பணியைப் போன்றது. (அ.எ.பே தொகுதி 14-பக்கம் 9 தமிழ்)

எல்லா வரலாற்று ஆய்வுகளுக்கும் ஆய்வாளனின் கற்பனை என்பது அவசியமானது. கற்பனைத் திறன் அல்லது படைப்புத் திறன் இன்றி யாரும் தமது ஆய்வைத் தொடர முடியாது என்பது வரலாற்று ஆய்வின் அடிப்படை அம்சம். ஆனால் படைப்புத் திறனை ஓர் எல்லைக்குள் வைத்தே பயன்படுத்த வேண்டும், இல்லையெனின் வரலாற்று ஆய்வு என்பது வெறும் கற்பனைகளின் குவிலாகிவிடும். அதற்கு எல்லை என்பது என்ன.. இந்த அடிப்படையான கேள்விக்கு குறைந்தப்பட்ச பதில், குறைந்தப்பட்டமான வரலாற்று தரவுகள்தான். குறைந்தப்பட்ச சான்றுகளின்றி தொடங்கினால் அது வெறும் கதையாகவே நிற்கும்.

எனவேதான் சேரிகளின் உருவாக்கத்தை நோக்கின ஆய்வில் கற்பனை என்பது நிகழ்காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பண்டைய சமூகங்களின் எச்சங்களே. இதை மறுத்து கடந்தகாலத்தினை பற்றின சித்திரத்தைப் பெற முடியாது.

எனவே, சேரிகளின் தோற்றத்தைப் பற்றின உருவகத்தைப் பற்றின அறிமுகத்தை அடைந்தப் பிறகு பார்க்க வேண்டியது என்னவெனில் அவை எவ்வாறு பரிணாமம் பெற்றன, எவ்வாறு பரிமாணம் அடைந்தன என்பதைதான். அதற்கு துணை செய்யும் வகையில்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் தொகுக்கப்பட்ட கேள்விக் குறிப்புகள். இவைதான் இந்த ஆய்வின் திசையைத் தீர்மானிக்க வல்லவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

எனவே, அடுத்த இதழில் சேரிகள் உருவான காலத்தினை தோராயமாக கணக்கிட்டுக் கொண்டு அக்கால மக்கள் தொகைக்கு ஏற்ப அவைகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும் என்றும், அவை காலமாற்றத்தில் எவ்வாறு பெருகி இருக்கும் என்பதையும், பல்வேறு மொழிகளில் அவை எவ்வாறு அழைக்கப்படுகின்றன என்பதையும் தொடக்கமாகக் கொண்டு பார்ப்போம்.

தொடரும்

 

Load More Related Articles
Load More By admin
Load More In Dalit History
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …