

Gowthama Sanna நம் கௌரவம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனித்துவமான அறிவாயுதமாய் விளங்குகின்ற கௌதம சன்னா, நடைபெறுகின்ற அரக்கோணம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். தன்னுடைய எழுத்தின் மூலமாகவும் ஆய்வு திறனின் மூலமாகவும் தலித் இலக்கிய வரலாற்றை புரட்டி போட்ட தத்துவ ஆளுமையாக கௌதம சன்னா விளங்குகின்றார். தமிழர் வாழ்கின்ற தேசங்களுக்கு அழைக்கப்பட்டு, அங்குள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் மக்களிடையே உரையாற்றி அவர்களிடையே வரலாற்று விழிப்பினை உருவாக்கி வருகின்றார்.
இவருடைய பங்களிப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் விடியலுக்கு அவசியமானது என்பதனால், எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட கௌதம சன்னாவுக்கு வாய்ப்பினை வழங்கியுள்ளார். எனவே அரக்கோணம் தொகுதி மக்கள் அனைவரும் கௌதம சன்னாவை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெற செய்ய வேண்டும். இப்படிபட்ட அறிவார்ந்தவர்கள் சட்ட மன்றம் சென்றால்தான் நம்முடைய அரசியல் விடுதலை எளிதில் சாத்தியப்படும் என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
கௌதம சன்னாவின் தனித்த ஆளுமைகள்:
1996 – சங்கம்-அம்பேத்கரியல் பயிற்சி மையம் – நிறுவனர்
1996 – தலித் வரலாற்று ஆவண பாதுகாப்பு மையம் – நிறுவனர்
1998 – தலித் மாணவ மாணவியர் கூட்டமைப்பு – நிறுவனர்
1999 – அனைத்து கல்லூரி மாணவ மாணவியர் கூட்டமைப்பு – நிறுவனர்
2003 – தலித் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பேரவை – நிறுவனரில் ஒருவர்
2004 – தலித் நிலவுரிமை இயக்கம் – செயலாளர்
2005 – இளையோர் பௌத்த கழகம் – நிறுவனர்
2012 – சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் – நிறுவனர்
2008 – 2014 மாநில கொள்கை பரப்புச் செயலாளர் / விசிக
2015 – தற்போதுவரை மாநில துணை பொதுச் செயலாளர் / விசிக
கௌதம சன்னா எழுதிய நூல்கள்:
1 – மதமாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும்
2 – பண்டிதரின் கொடை
3 – க.அயோத்திதாசப் பண்டிதர்
4 – கலகத்தின் மறைபொருள்
5 – குறத்தியாறு ( புதினம் )
6 – Dialogues On Anti-Cast Politics
7 – ஆண்களின் விடுதலை / தொகுப்பாசிரியர்
8 – தமிழ் உயிர் / தொகுப்பாசிரியர்
9 – தென்னிந்தியாவின் சமூக சீர்திருத்தத்தின் தந்தை / தொகுப்பாசிரியர்
10 – ஆதிதிராவிடர் வரலாறு / தொகுப்பாசிரியர்
11 – ரெட்டைமலை சீனிவாசன் / தொகுப்பாசிரியர்
கௌதம சன்னா நமக்கான கௌரவம்:
கௌதம சன்னா குறுகிய எல்லைகளுக்குள் சுருக்கிட முடியாத மாபெரும் பேராற்றல். எனவே சாதிகளையும், மதங்களையும், அரசியல் கட்சிகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுடத்தின் மகத்தான விடுதலையை வென்றெடுக்க இவரை சட்ட மன்றத்திற்கு மக்கள் அனுப்பிவைக்க வேண்டும். கௌதம சன்னா அரக்கோணத்தில் போட்டியிட்டாலும் அனைத்து தொகுதியிலிருந்தும் இவருடைய வெற்றியினை எதிர்நோக்கி அறிவார்ந்த சமூகம் காத்து கிடக்கின்றது. எனவே அரக்கோணம் மக்களே தத்துவத்தின் தலைமகன் கௌதம சன்னாவை வெற்றிபெற செய்யுங்கள்.