டெல்லியில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒப்பீட்டளவில் இந்தியாவில் உள்ள 53 பெரிய நகரங்களில் தலைநகர் டெல்லியில்தான் அதிகமான பாலியல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தோராயக் கணக்குப்படி நாளொன்றுக்கு சராசரியாக 13 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அந்தப் புள்ளி விவரம் காட்டுகிறது. அதுவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலேயே இந்த விவரம் பெறப்பட்டுள்ளது, இந்த ஆண்டு டில்லியில் 4,489 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளி விவரம் காட்டுகிறது.
டெல்லி முற்றுகை முடிவு பெறட்டும் இந்திய முற்றுகை தொடங்கட்டும்
