இஸ்லாம்யர்களிடம் பெளத்தம் பேசிய எழுத்தாளர் கெளதம சன்னா. பகுதி 2 இஸ்லாம்யர்களிடம் பெளத்தம் பேசிய எழுத்தாளர் கெளதம சன்னா. பகுதி 3
பௌத்தம் பற்றிய அறிமுகம்

இஸ்லாம்யர்களிடம் பெளத்தம் பேசிய எழுத்தாளர் கெளதம சன்னா. பகுதி 2 இஸ்லாம்யர்களிடம் பெளத்தம் பேசிய எழுத்தாளர் கெளதம சன்னா. பகுதி 3
எதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை …
இந்திய வரலாற்றில் அவ்வளவாக அறியப்படாத ஒரு புதிர். ராசபுதனத்தை ஆண்ட ராசபுத்திரர்கள் எவ்வாறு திடீரென மறைந்துப் போனார்கள் என்பது. இந்து அரசாட்சியின் அத்தனை கோரங்களையும், மிகக்கொடுமையான சதி உள்ளிட்ட வழக்கங்களையும் கடுமையாகப் பின்பற்றிய ராசபுத்திரர்களின் திடீர் மறைவு வரலாற்று ஆசிரியர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது. இதைப் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் கேள்வி எழுப்பினார். ராசபுத்திரர்களின் மறைவைப் பற்றி கவலைப்படும் வரலாற்றாய்வாளர்கள் தீண்டத்தகாத மக்களின் வரலாற்றைப் பற்றி எப்போதாவது கவலைப்பட்டதுண்டா என்று அவர் வினவினார். ஆனால் இதுவரை அதற்கு பதில் இல்லை. எனவே இது ஒரு …
பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை. சா.கௌதம சன்னா. குறிப்பு – கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் எ என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல ஒ நெடிலுக்கும் ஓ என்று இல்லாமல் ஒ–வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக …
– கௌதம சன்னா. கார்த்திகை மாதத்தின் பண்டகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் நமது சூழலில் அதை அதன் உள்பொருளோட கொண்டாடுகிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். புராணக் குப்பைகளில் நமது நாட்டின் ஏராளமான மகத்துவங்கள் மறைந்துப் போய், குப்பைகளையே வணங்குதும், அதை கொண்டாடுவதமாக நமது சமூகம் மாறி நீண்டக் காலங்களாகிறது கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் பல இட்டுக் கட்டியவைகள் என்றாலும் அந்த இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் …
பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயநலத்தை ஒதுக்கி, தியாகத்தை ‘காவி’ நிறத்தில் தந்தார். பவுத்தத் துறவிகளின் அய்ந்து பொருட்களில் காவி உடையும் ஒன்று. இது, துவராடை, காஞ்சீவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது (‘காஞ்சி’ என்றால் காவிநிறம், ‘சீவரம்’ என்றால் மேலாடை) இத்துணிகளை பெருமளவு அணிந்த துறவிகள் வாழ்ந்ததால், காஞ்சீவரம் என்றே தொண்டை மண்டலத் தலைநகரம் அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைக்கத்தான் தற்போது காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது. – கவுதம சன்னா
தமிழகத்தில் தலித் கட்சிகளிடையே அம்பேத்கரின் பௌத்தம் முன்னெடுக்க வேண்டியதையும் அரசியல் அடிப்படைக் குறித்த கருத்தருங்க உரை. http://youtu.be/IUcbJZkeOlw http://youtu.be/JpJJLbbjIeg http://youtu.be/d7yGOfNtv08 http://youtu.be/RrMf7-PtSEE http://youtu.be/qszSJosyKqc http://youtu.be/d_8UwRvkqFk
அம்பேத்கர்.இன் ஒருங்கிணைத்த பௌத்த நெறியேற்பு நிகவில்
மதிப்பிற்குரிய தம்மத்தில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது அன்பிற்குரிய சாந்த மூர்த்தி அவர்களின் மறைவு நமக்கு ஈடுசெய்ய முடியாதப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை, புரட்சியாளர் அம்பேத்கரின் வழியில் உள்ளார்ந்த ஈடுபாட்டோடு தம்ம பரப்புப் பணியில் உழைத்த வெகு சிலரில் சாந்த மூர்த்தி அவர்களும் ஒருவர் என்பது நாமறிந்த ஒன்றுதான், அப்படி உழைத்த சாந்த மூர்த்தி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு உங்களைப் போலவே நானும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். கெடுவாய்ப்பாக அவரது மறைவு நிகழ்ச்சியில் …