கலகத்தின் மறைபொருள்ரெட்டமலை சீனிவாசன் – ஆவணங்கள்ஆதிதிராவிடர் வரலாறுDialogues of Anti-caste Politics
கலகத்தின் மறைபொருள்ரெட்டமலை சீனிவாசன் – ஆவணங்கள்ஆதிதிராவிடர் வரலாறுDialogues of Anti-caste Politics
குறத்தியாறு நூல் குறித்து திறனாய்வு செய்யும் தாமரை இலக்கிய இதழின் ஆசிரியர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் தமிழில் இதுபோன்ற நூல் இல்லை என்று பேசுகிறார்.
எம் சி ராசா அவர்கள் எழுதிய நூலுக்கு எழுதிய மதிப்புரை எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது. எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை …
என்ற நூல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப் பட்டாலும், அந்த சட்டம் கொண்டு வரப் படுவதற்கு முன்பே கருணாநிதி அவர்களின் ஆட்சியில் போடப்பட்ட தலித்துகளுக்கு எதிரான ஒரு ஆணை தன மிக அடிப்படியானது என்பதை மிக விரிவாக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் இது. அது மட்டுமின்றி மத மாற்றம் தொடர்பாக இது வரை வெளியிடப்பட்ட அனைத்து வரலாற்று பின்னணிகளையும் ஆவணங்களையும் அரசமைப்பு சட்டப் பின்னணிகளையும் விரிவாக ஆய்வு செய்த நூல் இது மருதா வெளியீடு …
‘டாக்டர் கிருஷ்ணசாமியும், திருமாவளவனும் சாதிக் கலவரத்தைத் தூண்டுகிறார்கள்; தமிழகத்தைக் கலவர பூமியாக மாற்றுகிறார்கள்’ என்று கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ் உட்பட சாதி இந்து அரசியல்வாதிகள், போலிஸ் மற்றும் சாதியப் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வரும் பிரச்சாரம் இது. ஆனால், சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்கப் போராடும் மக்களின் பிரதிநிதிகளை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் ஆளும் வர்க்க கருத்தை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பரப்புவதன் மூலம், அவர்கள் எந்த வர்க்கத்தின் பக்கம் நிற்கிறார்கள்? சாதி இந்துக்களின் பக்கம் நிற்பதால்தான் தலித் தலைவர்களைத் தடுக்க – எந்தத் தயக்கமும் இல்லாமல் …
மத மாற்ற தடை சட்டம் வரலாறும் விளைவுகளும் – நூல் அறிமுகம் -அய்.இளங்கோவன் ———————————– ‘‘மதமாற்றம், தலித் அரசியலில் பிரிக்க முடியாத அம்சம். ஏனெனில், இந்து மதத்தினரால் வேறெவரையும்விட கடுமையாகப் பழிவாங்கப்பட்டவர்கள் தலித்துகள். அதனால் தங்களின் மத உணர்வுகளை, தேர்வு சுதந்திரத்தைத் தம் சமூக விடுதலையோடு தொடர்புபடுத்திக் காண்கின்றனர். இந்த அம்சத்தில் குறுக்கீடு வரும்போது – அவர்கள் பதில் சொல்லாமலோ, அந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலோ, ஒதுங்கி இருக்க முடியாது. குறிப்பாக, மதமாற்றத் தடைச்சட்டம் தலித்துகளைக் குறிவைத்து வரும்போது, தலித்துகள் அமைதியாக இருப்பது சாத்தியமில்லை” (‘மதமாற்றத் …
ரத்து செய்யப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டமும் ரத்து செய்யப்படாத (தலித்) மதமாற்றத் தடை ஆணையும் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்தானது முழுமை பெற வேண்டுமானால், கடந்த முறை தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த போது வெளியிட்ட, மதமாற்றத்திற்கு எதிரான ஆணையை (கடிதம் நகல் எண்: 81 / நாள் : 19.9.2000) உடனடியாக இன்றைய தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும் என்று, சென்ற மாத “தலித் முரசி’ல் குறிப்பிட்டிருந்தோம். இக்கருத்தை வலியுறுத்தும் வகையில், கவுதம சன்னா எழுதிய “மதமாற்றத் தடைச் சட்டம் …