மானிட பிறப்பைத் தேடிய நெடும் பயணங்கள்... 1 உலகம் எப்படி படைக்கப்பட்டிருக்கும் என்பதற்கு விடை காண மனித சமூகம் 3000ம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விரிவாக பேசத் தொடங்கியிருந்தது. இந்த கேள்விதான் தத்துவ கேள்வியாக மாறி சமுகத்தை இரண்டுத் தரப்பாக பிரித்துவிட்டது. இதில் உலகத்தையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்பியவர்கள் கருத்து முதல்வாதிகளாக ஆனார்கள். இவர்கள்தான் மனித பிறப்பு பற்றின தொண்மக் கதைகள் உருவாகக் காரணமானார்கள், அதைத்தான் கடந்த இதழில் பார்த்தோம். ஆனால், இவர்களின் கருத்தை மறுத்து, கடவுள் உலகத்தை படைக்கவில்லை. உலகமும், பிரபஞ்சமும் …