கதிரவன் ஒளி விழும் உலகின் நிலமனைத்தையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் முடிவு 1947ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு, தனது மாட்சிமையைக் காத்துக் கொள்ளவும் தனக்கென தனித்த அரசமைப்பு அடிப்படையிலான அரசை நிர்மாணித்துக் கொள்ளவும் கடுமையான நிர்பந்தத்தில் துணைக்கண்டம் அப்போது நின்றது. சுதந்திர இந்தியாவின் தேச நிர்மாணம் என்பது அவ்வளவு எளிதான காரியமா? எந்தவித முன்பயிற்சியுமற்ற தலைவர்கள் மாபெரும் இந்தியக் கூட்டரசை நிர்மாணிக்க பெரும் முயற்சிகளை எடுத்தார்கள் என்று நமது வரலாறு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் அந்த …