– கௌதம சன்னா இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம், கலவரத்திற்குப் பஞ்சமில்லாத மாநிலம். அங்குள்ள சாதி இந்துக்களின் கட்சிகளுக்கு அதுதான் அடிப்படை மூலதனம். குறிப்பாக, பாரதிய சனதா கட்சி அங்கு தனது பயங்கரவாத உயிரை ஒளித்து வைத்திருக்கிறது என்று இசுலாமியர்கள் நினைக்கும் அளவிற்கு அது சிறப்பு வாய்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. ரத்த ஆறாய் ஓடிய சரயு நதியின் ஓரத்தில் அமைந்துள்ள பாபர் மசூதி விவகாரம் மட்டுமல்ல, இசுலாமியர்கள் வசிக்கும் பகுதிகளும் தலித்துகள் வசிக்கும் பகுதிகளும் எங்கெல்லாம் …