கௌதம சன்னா இன்றைக்கு இதுதான் மிகப்பெரிய ஊடக கேள்வியாகவும், காவல்துறையின் கடினமான புலனாய்வுக்கு உரிய கேள்வியாகவும் மாறியிருக்கிறது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்த ரோகித் அங்கு நடந்த போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்ததினால் பல்கலைக்கழக விடுதி வளாகத்தை மட்டுமின்றி படிப்பிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஓர் ஆய்வு மாணவர் மீது மாநிலங்களவை உறுப்பினர் ராமசந்திர ராவ், மத்திய இணை அமைச்சர் தத்தாத்ரேயா, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி மற்றும் பல்கலை நிர்வாகம் என அதிகாரத்தின் பல பரிவாரங்கள் போர்த் தொடுத்துள்ளன. அதன் நெருக்கடியினை …