அப்சல் குருவின் படுகொலையை மறைக்க பயங்கரவாதிகளாகும் ஊடகங்களா
(21.02.2013) சில மணி நேரங்களுக்கு முன் ஐதரபாத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததாகவும் அதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சித் தரத்தக்க இந்த சேதி என்னை மிகவும் பாதித்தது. இந்தியாவின் தரங்கெட்ட அரசியல் சூதாட்டத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பலியாவதை நம்மால் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நமது கடமையை முடித்துக் கொள்வது ஒரு சடங்குப் போலத் தோன்றுகிறது. எனினும் குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட் வேண்டும் என்பது நமது கோரிக்கை.
அதே வேளை இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஊடகங்கள் தமது இந்து சார்புத் தன்மையை அப்பட்டமாகவும் வெட்கங்கெட்ட விதத்திலும் காட்டியுள்ளன. குண்டு வைத்தவர்கள் யார் என்ற விவரம் தமக்கு இதுவரை தெரியவில்லை என்பதால் அது பற்றி தம்மால் கருத்து கூற முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே போல மற்றொரு அமைச்சரான திவாரியும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த செய்திகளை வெளியுட்ட அதே ஊடகங்கள் ஐதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்கர் இ தொய்பா, இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட இசுலாமிய அமைப்புசகள் தான் காரணம் என்று உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக செய்திகளை வாசிக்கின்றன. மத்திய உளவுத் துறைகளுக்குக் கிடைக்காத துப்புத் தகவல்கள் இந்த ஊடகங்களுக்கு மட்டும் எப்படி கிடைத்தன என்பது பகவானுக்கே வெளிச்சம். இந்த தகவல்களை கொஞ்சம் முன்கூட்டியே திரட்டி அந்த குண்டு வெடிப்புகளைப் பற்றி எச்சரித்து மக்களைக் காப்பாற்றி இருக்கலாம் அல்லவா.. அதையும் செய்யவில்லை அந்த ஊடகங்கள். ஆனால் மாலேகான் குண்டு வெடிப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகத்தை வேறு கிளப்புகிறார்கள்.
வெட்கங்கெட்ட விதத்தில் இந்தியா ஊடகங்கள் சார்பு நிலையெடுத்து செய்திகளை வெளியிடுவது இந்தியாவை எங்கு கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை. மாலேகானில் குண்டுகள் வைத்தது இந்து பயங்கரவாதிகள் என்று நிறுபிக்கப்பட்டப் பிறகும் அதை திசைத் திருப்ப ஐதாரபாத் குண்டு வெடிப்புகளில் முன்கூட்டியே முசுலீம்களை குற்றவாளிகளாக அறிவிப்பது அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக இசுலாமியர்களிடம் உருவாகியுள்ள எதிர்ப்புணர்வை திசைத்திருப்பி, அவர்களின் மனதில் ஒரு குற்ற உணர்வை உருவாக்கத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
இசுலாமியர்களை உடனடியான குற்றவாளிகாக அறிவிக்கும் இந்த மனநிலை இந்து பயங்கரவாதத்தின் ஒரு அங்கம். இதை காங்கிரஸ் செயல்படுத்துகிறதா அல்லது பிஜேபி செயல் படுத்துகிறதா என்றே கேள்விக்கே இடமில்லை. இரண்டும் ஒன்றுதான். அதற்காகத்தான் ஊடகங்கள் ஒத்து ஊதுகின்றன. ஒருவேளை மாலேகானில் இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளைப் போலத்தான் ஐதராபாத்திலும் வைத்திருக்கிறார்கள் என்று பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் அப்போது பிளேட்டை மாற்றுவதற்கு பதில் செய்திகளை மறைக்கத்தான் பார்ப்பார்கள் இந்த ஊடகக்காரர்கள். குறைந்தப்பட்ச நாணயம் கூட இல்லாமல், முசுலீம்களை உடனடி குற்றாவாளிகளாக அறிவிப்பதை அயோக்கியத்தனத்தின் கோரவடிவம் என்றே சொல்ல வேண்டும். இவர்கள் உருவாக்கும் பொது மனநிலைதான் அப்பாவிகளைத் தூக்கில் ஏற்ற உதவுகிறது. உண்மையான அயோக்கியர்களை பொத்திப் பொத்திப் பாதுபாத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? இதுதான் இந்தியப் பற்றா?
எனவே, சுசில் குமார் சிண்டே சொன்னதை கொஞ்சம் மாற்றிச் சொல்ல வேண்டும். காவி மட்டும் பயங்கரவாதமில்லை காங்கிரசும் இப்போது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதுதான். கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் ஊடக பயங்கரவாதமும் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
/ சன்னா/21.02.2013