விரைவில் பாகிஸ்தான் நாட்டில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதன்முறையாக வாஜ்பாய் பிரதமரானபோது கார்கில் போர் வந்தது. வெற்று பாறைகள் நிறைந்த சியாச்சின் மலை முகடுகளை பாதுகாக்க என்ற பாசாங்கில் நடத்தப்பட்ட ஒத்திகைப் போர் அது. அந்த போர் முடிந்த உடனே ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஷ் முசாரஃப் அதிபராக ஆட்சியைப் பிடித்தார். அதைக் காரணம் காட்டி இந்தியாவில் அதிபர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றபாஜக-வின் கோரிக்கை வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் …