நடிகர் கமல்ஹாசன் தற்போது நடக்கும் பரபரப்பான பிரச்சினையின் மையப்புள்ளியாகிவிட்டார். 90 கோடி ரூபாய் செலவில் அவர் எடுத்த விஸ்வரூபம் என்றத் திரைப்படம் பிரச்சினைக்கு மூலவேர். இந்த திரைப்படத்தை அவர் எடுத்தப் பிறகு அதன் மீதான விமர்ச்சனங்கள் வருவதற்கு பதில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எனினும் படத்தில் குரானையும் சில இடங்களில் இசலாமியர்களை மோசமாக சித்தரித்திருப்பதாக படத்தைப் பார்த்தவர்கள் சொன்னதின்பேரில் இசுலாமியர்களிடையே கோபம் எழத் தொடங்கியிருந்தது. இந்நிலையில்தான் படத்தை எதிர்க்க வேண்டும் என்று தேசிய லீக் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நான் …