தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ …