அப்சல் குருவின் படுகொலையை மறைக்க பயங்கரவாதிகளாகும் ஊடகங்களா (21.02.2013) சில மணி நேரங்களுக்கு முன் ஐதரபாத்தில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததாகவும் அதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் 50 மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சித் தரத்தக்க இந்த சேதி என்னை மிகவும் பாதித்தது. இந்தியாவின் தரங்கெட்ட அரசியல் சூதாட்டத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பலியாவதை நம்மால் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நமது கடமையை முடித்துக் கொள்வது ஒரு …