உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்ததுடன் வேறு அணைகள் கட்டுவதற்கும் தடை விதித்தச் செய்தி ஊடகங்களில் வந்தவுடன் அனைவரும் தத்தமது மகிழ்ச்சிகளைப் பதிவு செய்தார்கள். வரவேற்கத் தக்க தீர்ப்புதான் என்றாலும் நாம் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. நதிநீர் உரிமையை மீட்பதில் ஓர் அரசின் சாதனை என்பது ஒன்றும் இல்லை, அது அரசின் கடமை. கடமையை நிறைவேற்றுவதை சாதனையாக கொண்டாடுவதும் அதற்கு அனைவரும் பாராட்டுத் தெரிவிப்பது ஒரு சடங்கான செயல். ஆனால் பாராட்டியாக வேண்டிய செயல்களை …