ஆகஸ்ட் மாதத்தை இனி ‘இனவெறி எதிர்ப்பு மாதமாக’ வரலாறு வரித்துக் கொள்ளும். நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்கா – தகுதிவாய்ந்த இடமாக, குற்றவுணர்வு கொண்டவர்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இனவெறிக்கு எதிராக உலகம் களமிறங்க வேண்டிய இடம் இந்தியா என்பது, எப்படி தங்களது பார்வையிலிருந்து போனதோ? இன ஒதுக்கலை விட கொடூரமான முறையில் இயங்கும் சாதியும், தீண்டாமையும் 30 கோடி தலித் மக்களை நாள்தோறும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைக்கு ஈடான மக்கள், ஜப்பானியர்களைப்போல ஒன்றரை மடங்கு அதிகமான மக்கள் தொகையுள்ள தலித் மக்கள், …