சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …
சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்… கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …
Part 1 Part 2
மனித பிறப்பெடுத்த தொண்மங்கள் உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் …
தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …
எம் சி ராசா அவர்கள் எழுதிய நூலுக்கு எழுதிய மதிப்புரை எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது. எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை …
பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டிய புத்தர், பார்ப்பனர்களின் தலையாய கொள்கையான சுயநலத்தை ஒதுக்கி, தியாகத்தை ‘காவி’ நிறத்தில் தந்தார். பவுத்தத் துறவிகளின் அய்ந்து பொருட்களில் காவி உடையும் ஒன்று. இது, துவராடை, காஞ்சீவரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டது (‘காஞ்சி’ என்றால் காவிநிறம், ‘சீவரம்’ என்றால் மேலாடை) இத்துணிகளை பெருமளவு அணிந்த துறவிகள் வாழ்ந்ததால், காஞ்சீவரம் என்றே தொண்டை மண்டலத் தலைநகரம் அழைக்கப்பட்டது. இந்த வரலாற்றை மறைக்கத்தான் தற்போது காஞ்சிபுரம் என்று மாற்றப்பட்டுள்ளது. – கவுதம சன்னா
சோதனைப் பதிவு
தீபஒளி திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது. இதற்கு இரண்டு விடைகள் சொல்லப்படுகிறது. நம் குழந்தைகளைக் கேட்டால், “தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த பயங்கரமான அசுரனான நரகாசுரனை கிருட்டினர் எனும் அவதாரமெடுத்துக் கொன்று விட்டார். அவர் இறக்கும் தருவாயில், ‘தான் கொடுமைகள் பல புரிந்து விட்டதால், தான் இறந்த பிறகு இந்நாளை மக்கள் தீபம் ஏற்றி மகிழ வேண்டும்’ என நரகாசுரன் கேட்டுக் கொள்ள, ‘அப்படியே ஆகட்டும்’ என்றாராம் கிருட்டினர்”. தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் மகிழ்வோடு இருக்க @வண்டும் என்று நரகாசுரன் ஏன்,கேட்டுக் கொண்டார். பட்டாசு கொளுத்தி …