தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தையும் இந்தக் கருத்தரங்கில் கலந்துக்கொள்ள முடியாமைக்கு வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முறை தொடர்பான மறு ஆய்வு குறித்து எழுச்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் முன் வைத்த கருத்தை வலுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய அளவில் விவாதத்தினை மேற்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பில் அன்பிற்குரியப் நமது பொதுச் செயலாளர் மா.செ.சிந்தனைச் செல்வன் அவர்கள் தகுந்த முயற்சியை மேற்கொண்டு அதன் தொடக்கமாக இக்கருத்தரங்கு அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அந்த நம்பிக்கையை முழுமையாக ஏற்று ‘தேர்தல் சீர்திருத்தங்கள் ஓரு வரலாற்றுப் பார்வை’ என்றத் தலைப்பில் கருத்துரை வழங்க இசைந்தேன். இச்செய்தியுரையில் முழுமையாக என் கருத்துக்களை பதிவு செய்ய இயலாதாயினும் சில அடிப்படைக் கருத்துக்களை மட்டும் பகிர்ந்துக் கொள்ள உங்கள் அனுமதியை நாடுகிறேன்.
இந்தியாவில் 1887ம் ஆண்டு தேர்தல் முறை அறிமுகப்படுத்தப் பட்டது அப்போது தேர்தலில் பங்குகொள்வதற்கும் போட்டியி;ன் :மூலம் அதிகாரத்தைப் பெறவும் இந்திய உயர்சாதியினரும்இ வணிகர்களும் தயாராக இல்லாத நிலையில் அவர்களை தேர்தல் வளையத்திற்குள் கொண்டுவர ஆங்கிலேய அரசு மேற்கொண்ட முயற்சிதான் காங்கிரஸ் கட்சி. முதல் தேர்தல் தொடங்கிய முதலே தேர்தல் முறைகளில் முறைகேடுகள் நடந்தன. வாக்குகளைப் பெறுவதற்காக போட்டியிட்ட உயர்சாதி வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு சலுகைகளையும் சன்மானங்களையும் வழங்கியதாகப் புகார்கள் எழுந்தன அதுமட்டுமின்றி சமுதாயத்தி;ன் பல பிரிவுமக்கள் தேர்தல் மூலம் அதிகார்;த்தைப் பெறுவதிலிருந்து தடுக்கப்பட்டனர். காரணம் என்னவென்றால் அரசு காட்டும் சலுகை அதிகாரத்தை முதலில் உயர்வகுப்பினருக்கு கொடுக்கவே ஆங்கிலேய அரசு உத்தேசித்தது அதன்படி வழங்கியும் பார்த்தது. ஆனால் தொடந்து சமுகத்தின் பிற பிரிவு மக்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர் எனவே அடுத்தத் தேர்தலில் சில மாற்றங்கள் கொண்டுவரப் பட்டன. தொடர்ந்து இசுலாமியர்களுக்கு தேர்தலில் பங்கெடுக்கும் தனி உரிமை 1907ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன்படி அவர்கள் தமக்கான மறுநிகரிகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
இதன்பிறகு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பல தேர்தல் மாதிரிகள் பரிசீலிக்கப்பட்டு சில மாதிரிகள் பி;ன்பற்;றப்பட்டனஇ வாக்களிக்கும் முறையில் பல மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. வாக்களி;ப்பதற்கான தகுதிகள் பல வகையில் நிர்ணயிக்கப்பட்டனஇ இந்த தகுதிகள் தலித் மக்களுக்கு இல்லமால் போனதால் அவர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவதற்கு போராட வேண்டியிருந்தது. எனவே வயது வந்தோர் வாக்குரிமையை புரட்சியாளர் அம்பேத்கர் மிகக் கடுமையாக வலியுறுத்தினார். இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் அதற்காக கடுமையாகப் போராடினார்.. வென்றார்.. பெற்றார்.
இதன் விளைவாக தலித் மக்கள் 1937ம் ஆண்டு நடந்தப் பொதுத் தேர்தலில் முதன் முறையாக வாக்களித்தனர் தேர்தல் தொடங்கி 50 ஆண்டுகள் கழித்துதான் தலித் மக்கள் வாக்களித்தனர். அதுவும் கடைசி சமூகமாக.
இந்த இடைபட்டக் காலங்களில் தேர்தல் முறைகளில் மாறுதல்கள். மறுநிகரித்துவ முறைகளில் மாறுதல்கள் புகுத்தப்பட்டனஇ தொடந்து விடுதலைப் பெற்ற இந்தியக் கூட்;டரசில் எளிய தேர்தல் முறை (ளுiஅpடந நுடநஉவழைn ளுலளவநஅ) பிரிட்டிசு மாதிரியை பின்பற்றி அறிமுகப்படுத்தப் பட்டது ஆனால் தலித் மக்கள் வாக்களிக்கும் முறையில் நான்கு வாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டு அதுவும் பின்பு நீக்கப்பட்டது. அதிலிருந்து தற்போதைய தேர்தல் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
தற்போதைய வாக்களிப்பு முறை மற்றும் மறுநிகரிகள் தேர்வு முறை என்பது புதுமையானதோ நேர்மையானதோ அல்;லஇ அது மிகப் பழமையானது மட்டுமி;ன்றி ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே சாதகமானது என்று தொடர்ந்து கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஏனெனில் இந்தத் தேர்தல் முறை எப்போதும் சிறுபான்னை குழுவையே தேர்வு செய்யும்படி அமைக்கப் பட்டுள்ளதால் இதில் மாற்றத்தைக் கொண்டுவர ஆளும் வர்க்கம் விருப்புவதில்லை
ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எதிராக பதிவான வாக்குகள் பல கட்சிகளின் வாக்குகளாகச் சிதறியிருப்பதால் அவை எப்போதும் கவனிக்கப் படுபதில்லை இந்த சாதக அம்சத்தினைப பயன்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கம் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது.
ஆகஇ தற்போதைய தேர்தல் முறையானது வெகு மக்களின் விருப்பத்தினை மறுப்பதாக உள்ளது என்பது வெளிப்படை. மட்டுமின்றி பல சிறுபான்மை மக்களை அதிகாரத்திலிருந்து விலக்கி அது வைத்துள்ளது. அப்பட்டமான இந்த மக்கள் விரோத தேர்தல் முறை உடனே மாற்றி அமைக்கப்பட வேண்டியது வரலாற்றுத் தேவை.
இக்கருத்துக்களின் அடிப்;படையில் தேர்தல் முறை பின்வருமாறு அமையவேண்டும்
நாட்டின் அனைத்துச் சிறுபான்மையினரும் தேர்வு செய்யப்படக்கூடிய அளவில் மறுநிகரித்துவ முறை (Proportional Representative System) பரவலாக்கம் பெறவேண்டும்.
கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சட்டமன்ற நாடாளுமன்ற அவைகளில் இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்.
கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தேர்தல் சின்னம் அனைத்தும் பொதுவாக்கப்பட்டு தேர்தலுக்கு முன்பு அனைத்துக் கட்சிகளுக்கும் தனிச் சின்னங்கள் ஓதுக்கப்பட வேண்டும். நிரந்தரச் சின்னம் முறை ஓழிக்கப்பட வேண்டும்.
இவை மக்களாட்சியின் மீது நம்பிக்கையை வளர்க்கும் கோரிக்கைளாகும் இவை நடைமுறைப் படுத்தப்பட்டால் உண்மையான மக்களாட்சி மலரும் என்பது எமது நம்பிக்கை. நன்றி வணக்கம்.
(30.07.2011 அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட உரை)