நேற்றைய தினம் தமிழக சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி தமிழகத்தில் பார்த்தீனியம் செடிகள் ஒழிக்கப்பட இருப்பதை உள்ளபடியே நாம் வரவேற்க வேண்டும். ஆனால் கூடவே வேலிகாத்தான் மரங்களை ஒழிப்பதற்கு இயக்கம் கொண்டு வரவேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2011 தேர்தல் அறிக்கையில் பார்த்தீனியமும் வேலிகாத்தான் மரங்களும் ஒழிக்கப்பட வேண்டும், ஏரிகளில் வேல மரங்களை வளர்ப்பது தடுக்க படவும், ஏற்கெனவே வளர்ந்துள்ள மரங்கள் வெட்டப் பட்டு அனைத்து ஏரிகளும் குளங்களும் ஆழப்படுத்தப் பட்டு அருகில் உள்ள ஆறுகளுடன் இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது,
அதன் மூலம் புதிய நீர் வள மேலாண்மைக் கொள்கை வகுப்படும் என விசிக கூறியது. எனவே இந்தப் பரிந்துரைகளும் ஏற்றுக் கொள்ளப் பட்டு அதற்கான தனி இயக்கமும் பரவலான மக்கள் பங்கேற்பும் வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அறிக்கையில் தொலை நோக்கோடு குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த தருணத்தில் இந்த ஆலோசனைகளை முகநூலிலுள்ள நண்பர்கள் முன்னெடுக்க வேண்டுகிறேன்.