வடலூரில் பிரிக்கப்பட்டக் சாதி மறுப்புத் திருமணத் தம்பதி
தருமபுரியில் குச்சிக்கொளுத்தி வைத்தியர் ஏற்றி வைத்த தீ வட தமிழகத்தில் எரிந்துக் கொண்டிருப்பதை அணைக்க முடியாமல் அரசு வழக்கம்போல வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, மனம் பதற வைக்கும் பாதகச் செயலை இன்று (28.12.2012) வடலூரில் அரங்கேற்றினார்கள் பாமகவின் முன்னணி நிர்வாகிகள்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள •விருப்பாச்சி• கிராமத்தை சேரியில் வசிக்கும் 24 வயதான இளைஞரான •பாஸ்கர்• சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும கொஞ்சம் பொருளாதார வளத்தோடு இருக்கிறார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
பண்ருட்டிக்கு அருகில், வல்லூர் எனும் கிராமத்திற்குப் பக்கத்தில் உள்ள •ஆபத்தாணபுரத்தை• சேர்ந்தவர் வன்னியப் பெண்ணான •அனீசியா• (வயது 21) வடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேற்கண்ட இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்குயிராகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் பலருக்குத் தெரிந்திருந்தாலும் பெண்ணின் வீட்டில் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லை.
ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கினார்கள் அவரது வீட்டில். இதை ஏற்றுக் கொள்ளாத அனிசீயா தனது காதலருக்குத் தகவல் கொடுக்க இருவரும் வீட்டினை விட்டு வெளியேறி கடந்து ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் செய்துக் கொண்டவர்கள் கோவையில் குடியேறி தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குச்சிக் கொளுத்தி வைத்தியர் கொளுத்தியத் சாதி வெறி எனும் தீ அனிசீயாவின் வீட்டைப் பிடித்துக் கொண்டது. பாமகவின் முன்னணி நிர்வாகிகள் அந்த அப்பாவி பெண்ணின் வீட்டை முற்றுகையிட்டு பெண்ணை பிரிக்கும்படி வற்புறுத்தியதின் பேரில், அவர்களின் அழுத்தத்தைப் பொருக்க முடியாத அந்தக் குடும்பத்தினர் பிரிக்க ஒத்துக் கொண்டனர்.
இதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சாதி வெறியர்களின் ஏவலாளர்களா காவலர்கள் புகாரை பெற்றுக் கொண்டதும் தமது கடமையை படுவேகமாக செய்தார்கள். பாஸ்கரின் கிராமமான விருப்பாச்சியில் உள்ள அனைத்து தலில் வீடுகளிலும் தேடுதல் வேட்டை என்ற பெயரில் மிரட்டல் வேட்டை நடத்தியதுடன். பாஸ்கரின் உறவினர்கள் அனைவரையும் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்திருக்கிறார்கள். மணமக்களை கண்டு பிடித்துக் தரச்சொல்லி குச்சிக்கொளுத்தி வைத்தியரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் 150 மேற்பட்டவர்கள் ஒட்டுமொத்த சேரியையே கொளுத்தி விடுவோம் என்று மிரட்டினார்கள். காவல்துறையினரும் இதை வேடிக்கை பார்க்கவில்லை மாறாக சொல்லிவிடுங்கள் இல்லையென்றார் கொளுத்தி விடுவார்கள் என்று கூடவே ஒத்து ஊதியிருக்கிறார்கள்.]
அவர்களின் விசாரணையில் தகவல் தெரியாதவர்களால் சொல்ல முடியவில்லை, ஆனாலும் அவர்கள் தலித் மக்களின் சாதியைச் சொல்லித் திட்டியதுடன் கடுமையாக தாக்கியும் இருக்கிறார்கள். எனவே சேரியின் மக்களைக் காக்க வேண்டிய நிர்பந்தத்தில் சிலர் மணமக்கள் கோவையில் இருக்கும் முகவரியைச் சொல்லிவிட, கடமை தவறாத காவலர்கள் கோவைக்குச் சென்று நைச்சியமாய் பேசி அழைத்து வந்துள்ளனர்.
வந்தவர்கள் பாதுகாப்புக் கருதி வடலூருக்கு அருகில் உள்ள •விழப்பள்ளம்• கிராமத்தின் உள்ள தலித் சேரியில் தங்கியுள்ளனர். அங்கே உள்ள தலித் மக்கள் மணமக்களை அனுப்ப மறுத்ததுடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளக் கூடிய சட்டப்படியான வயதை அடைந்துவிட்டனர். எனவே பிரிக்கக்கூடாது என வாதிட்டுள்ளனர். அதானால் •ஜெயா• என்ற பாஸ்கரின் உறவுப் பெண்ணை காவலர்கள் கடத்திக் கொண்டுபோய் காவல் நிலையத்தில் வைத்து மணமக்கள் வந்தால்தான் ஜெயாவை விடுவோம் என்று மிரட்டியதுடன். மணமக்கள் வந்தால் பெண்ணின் விருப்பபடி முடிவெடுப்போம் என்று காவலர்கள் சொன்னார்கள். அதனால் மணமக்களை விழப்பள்ளம் காலணி மக்கள் கொண்டுபோய் இன்று (28.12.2012) மாலை வடலூர் காவல் நிலையத்தில் விட்டனர்.
அங்கே அனிசீயா மிகத் தெளிவாக “நான் விருப்பமுடன்தான் போய் திருமணம் செய்துக் கொண்டேன்” என வாக்குமூலம் அளித்ததை காவலர்கள் பதிவு செய்தனர். ஆனால் குச்சிக் கொளுத்தி வைத்தியரின் அடியாட்கள் அனிசீயாவை தனியாகக் கொண்டு போய் “அவளது கணவனை கொன்று விடுவோம் என்று மிரட்டியதில்” அந்த அப்பாவி பெண் பேதலித்து நின்றிருக்கிறாள். இதைப் பயன்படுத்திக் கொண்ட அடியாட்கள் அந்த பெண்ணை பாஸ்கர் கடத்திச் சென்றதாக புகாரினை மாற்றி பதிவு செய்தனர்.
காவல் நிலையத்திச் சுற்றி அந்த வன்னிய அடியாட்கள் இருந்ததால் கணவனின் உயிரைக் காக்க வேறு வழியில்லாதால் அந்த அபலை நீதிமன்றத்திலும் தான் கடத்தப்பட்டதாக சொல்ல, பாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இப்போது நமக்கு இருக்கும் பயம் என்னவென்றால் தனது கணவரின் உயிரைக் காக்க நீதி மன்றத்தில் பொய் சொல்லும் கட்டாயத்திற்கு ஆளான அனீசியாவின் உயிருக்கு என்ன உத்திரவாதம் என்றே தெரியவில்லை.
அந்தப் அப்பாவிப் பெண் கௌரவக் கொலை செய்யப்படுவதற்கான அபாயத்தில் இருக்கிறார். குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிக்கப் பட்ட அந்தப் பெண் உலக வாழ்க்கைலிருந்து பிரிக்கப்படாமல் காப்பற்றப்பட வேண்டும்.
அதே போல பிணையில் வெளிவர இருக்கும் பாஸ்கரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை.
வன்னியக்குலச் சத்திரியர்கள் தீவிர இந்து சாதி வெறியர்கள் என்பதால் அவர்கள் செய்த பாவத்தினை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமை. அவர்கள் செய்த பாவம் ஆயிரம் காராம் பசுக்களை கொன்றப்பாவம், இந்த பாவம் குச்சிக் கொளுத்தி வைத்தியரையும் விடாது என்பது நிச்சயம்.
எனவே, உயிருக்குப் அபாயமுள்ள அந்தப் பெண்ணை உண்மையான வன்னியர்களே காப்பாற்றுங்கள்.
28/12/2012/சன்னா