கோவையில் கடந்த 16.01.2013 அன்று இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 4000 பேர்கள் கலந்துக் கொண்டனர். ஆனால் கேலிக்கூத்தாக வெறும் 40பேர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தச் சேதியைக் கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாகவும், ஏனெனில் நான்காயிரம் பேர்கள் கலந்துக் கொண்டதில் வெறும் நாற்பது பேர்கள் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள் என்றால் ஏதோ ஊழல் நடந்திருக்கும் என்று இயல்பாகவே நமக்குத் தோன்றும். ஊழல் நடப்பதற்கு வாய்ப்பிருந்தாலும் பணத்தைக் கொடுத்து வேலையைப் பெற்றிருக்கலாம், ஆனால் தேர்வானவர்கள் மிகக்குறைவு என்பதால் ஊழல் நடந்திருக்காது என்றேத் தோன்றுகிறது. ஏனெனில் தேர்வு நடந்த விதத்தைப் பார்க்கும்போது சாதியின் கேடுகெட்ட மரபுசார்ந்த அவலம் வெளிப்பட்டது.
ஆள்சேர்ப்பு முகாமிற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 42 வயது வரையுள்ள 4000 பேர்கள் கலந்துக் கொண்டனர். தேர்வுக்கு வந்தவர்களை பின்வரும் காரணங்களைச் சொல்லி கழித்துக் கட்டியுள்ளனர் அதிகாரிகள்.
– போதிய உயரமில்லாதது.
– நன்னடத்தைச் சரியில்லாதது.
– சாதிச் சான்றிதழ்களை சரியாக கொண்டு வராதது.
– தொடர்ந்து 10 புல்லப்ஸ்கூட எடுக்க முடியாதது.
– 50 கிலோவுக்கும் குறைவான எடை இருந்தது.
என்றக் காரணங்களைக் காட்டி பலர் வெளியேற்றப்பட்டனர்.
– மீதியுள்ளவர்களில் போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் 1600 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் ஓடவைக்கப்பட்டனர். ஒரு சுற்றில் 100பேர்கள் ஓடினால் 4 முதல் 5 பேர் மட்டுமே குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைந்தனர். மற்றவர்கள் பாதியிலேயே பின்தங்கியும், களத்தினைவிட்டு வெளியேறியும் போயினர். அதனால் 4000பேர்களில் வெறும் 40 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
கோடிக்கணக்கான இளைஞர்கள் கொண்ட நாட்டில் வெறும் சாதி திமிரைப் பேசிக்கொண்டு, கும்பலாய் கூடும்போது மட்டும் வீரத்தைப் பேசிக்கொண்டு, கும்பலாய் வந்து, வெற்றுச் சவடால்களை விட்டுக்கொண்டும், கொஞ்சம் ஏமாந்தால் குடிசைகளுக்கு தீவைத்துவிட்டு நாங்கள் வீரப்பரம்பரை என்று பெருமை பேச மட்டும்தான் கற்றுக் தந்திருக்கிறது இவர்களின் சாதி.
உண்மையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் ‘இவர்கள் வேலைக்காக மாட்டார்கள்’ என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது. வீரத்தைக் காட்டவேண்டிய ராணுவத்திற்கு இளைஞர்களை உருவாக்க முடியாமல் செய்தது எதுவென்றால் அது சாதிதானே. ஒரே சாதியில் திருமணம் செய்துக்கொண்டால் இப்படி வேலைக்காகத இளைஞர்கள்தான் கிடைப்பார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு முறை சொன்னார், ‘இந்த சாதியினால் இராணுவத்திற்கு ஆளெடுக்கக்கூடிய அளவிற்கு பலமானவர்களை உருவாக்க முடியாது’ என்று சொன்னார். அவரின் அவதானிப்பு இப்போதும்கூட உண்மையாகியிருக்கிறது.
ஒரே சாதியில் திருமணம் செய்துக்கொண்டால் இப்பேர்பட்ட சூரர்கள்தான் பிறப்பார்கள் என்பது எப்போதோ நிறுவப்பட்ட உண்மை, சாதிகள் கலப்பதால்தான் வீரியமிக்க, பலமிக்க இளைஞர்களும், இளைஞிகளும் பிறப்பார்கள் என்பது அறிவியல் உண்மை. ,இந்த உண்மைப் புரியாமல் எங்கள் சாதிதான் ஆண்ட பரம்பரை, நாளை ஆளப்போகும் பரம்பரை என்றெல்லாம் பேசி இனி ஏமாற்ற வேண்டாம்.
உங்கள் துப்புக் கெட்டச் சாதிப் பாசத்தினால் இந்தியா தனது ராணுவத்திற்கு தேவையான இளைஞர்கள் பட்டாளத்தை உருவாக்க முடியவில்லை என்றால் சாதியின் யோக்கியதையை புரிந்துக் கொள்ளலாம். இதை விட இன்னொருக் கேவலம் என்வென்றால் நமது குச்சிக் கொளுத்தி வைத்தியர் வன்னியர் இளைஞர் படையினை அமைக்கப் போகிறாராம். என்ன வெட்கங்கெட்ட வேடிக்கை, இவர் திரட்டும் இளைஞர் கும்பலை வைத்து தருமபுரியில் நடத்தியதைப்போலத் திருடலாம், தீ வைக்கலாம், கும்பலாய் போய் டாஸ்மாக் கடையில் கலாட்டாச் செய்யலாம் ஒரு நாளும் படையாக மாற முடியாது. ஏனென்றால் தேர்வான அந்த 40 பேரில் ஒருவர்கூட வன்னியர் இல்லை…
– சன்னா./17/01/2013