கார்ல் மார்க்ஸ் பிறந்த டிரியா நகரில் உள்ள அவரது இல்லத்தில் 2018ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் முதன் முறையாக சென்றேன். மிகுந்த உணர்வெழுச்சியுடன் இந்த இல்லம் முழுமைக்கும் சுற்றி சுற்றி வந்தேன். அவரோடு உரையாடினேன்.
ஏறக்குறைய நாள் முழுக்க அந்த நகரிலேயே இருந்தேன். அடுத்த நாளும் அவரது வீட்டிற்குப் போய் சுற்றினேன். அவர் நடந்த ஒவ்வொரு அடியிலேயேயும் எனது காலடிகளைப் பதித்து அவரோடு நடந்தேன். ஒரு ஆசிரியனுக்கு ஒரு மாணவனாக வேறு எதை என்னால் செய்ய முடியும். நேரில் பார்க்காத ஓர் ஆசிரியர் அவர் ஆனால் எப்போதும் என்னை வழி நடத்துகிறார். அதனால்தான் அவரை அவரது வீட்டிலேயே சந்திக்க வேண்டும் என்று கிளம்பிப் போய் எனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டேன். விரிவாக எழுதுகிறேன்.. விரைவில்