கட்சி – அறிமுகக் குறிப்புகள் – கௌதம சன்னா 1 அறிமுகம் விடுதலைச்சிறுத்தைகள் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றிலும்கூட விடுதலைச்சிறுத்தைகளின் வேளச்சேரி தீர்மானங்கள் ஒரு திருப்புமுனை. தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் முன்வைத்த தீர்மானங்களை கட்சி முழுமையாக ஏற்றுக்கொண்டு, கட்சியின் மாநில – மாவட்ட பொறுப்புகள் கலைக்கப்பட்டதுடன், கட்சியில் தலித் அல்லாததோர், பெண்கள், சிறுபான்மை மதத்தவர், அரவாணிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ஆறுமாதங்களுக்குப் பிறகு தீர்மானங்கள் முழுமையாக நிறைவற்றப்பட்டு, உறுதியான கட்சி தற்போது அமைக்கப்பட்டுள்ளது.