நீதி அரசர் மார்கண்டேய கட்ஜ். அவர்களின் பெட்டியினை அனைவரும் காண வேண்டும் என விரும்புகிறேன், இந்திய அச்சு ஊடகங்களின் தற்போதைய நிலையினை தெளிவாக விமர்சனம் செய்துள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக அவர் பதவி ஏற்ற உடன் ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிகாட்டியுள்ளார். அச்சு ஊடகங்கள் அரை குறை அறிவுடன் 80 சதவிகிதம் மக்களை முட்டாளாக்கும் பணியினை செய்கின்றன,
நடிகைகள் , கிரிகெட், பேஷன் ஷோ போன்ற மக்களை மயக்கும் ஒபியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒரு சில பத்திரிகையாளர்களை தவிர பெரும்பாலோர் நேர்மையின்றி செய்திகளை தயாரித்து சந்தையிடுகிறார்கள் என குற்றம் சாட்டுகிறார் கட்ஜ்.
நேர்மையான நீதியரசர் என பெயர் பெற்ற கட்ஜ் அவர்களின் முயற்சி வெல்ல வேண்டும். அன்ன அசரே போன்ற போலிகளை உயர்த்தி பிடித்த ஊடகங்கள் கட்ஜ் அவர்களின் பேட்டியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டன என்பதே ஊடகங்களின் ஊழலுக்கு சாட்சி.