சமரசம் கோரும் பாமக படைவீரர்கள்
சேலம் மாவட்டம், வாழப்பாடி நகரம் என்றமில்லாத அளவில் பதட்டத்தில் இன்று இருக்கிறது. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துக்கொண்டக் கதையாக பாட்டாளிச் சொந்தங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
16.01.2013 அன்று இரவு சினிமா பார்க்க எல்லோரும் போயிருக்கிறார்கள். அதில் வன்னியர் தலித் என்ற பேதம் இல்லை. ஆனால் படம் பார்த்துவிட்டு வந்த சில தலித்துகளுக்கும் வன்னியர்களும் அற்ப காரணங்களுக்காக வாய்த்தகறாறு வந்திருக்கிறது. அது கைகலப்பாக மாறி வன்னியர்கள் தலித்துகளை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தலித்துகள் சிலபேரே இருந்ததால் அவர்களால் எதிர்த்துத் தாக்க முடியாமல் போய்விட்டது.
பின்பு, பாதிக்கப்பட்ட தலித்துகள் ஒன்றாய் சேர்ந்து தாக்கியவர்களின் வீட்டிற்குப் போய் நையப் புடைத்திருக்கிறார்கள். பதிலுக்குப் பதில் முடிந்து விட்டது. ஆனால் நமது குச்சிக் கொளுத்தியின் நாட்டாமைகள் இதை விட்டுவிடுவார்கள்.. வீரவன்னியர்களாயிற்றே.. முடிந்துப் போன விசயத்தை கையிலெடுத்து பிரச்சினையைப் பெரிதாக்கினார்கள்.
மறுநாள் காலை (17.01.2013) சுமார் 500க்கு மேற்பட்ட வன்னியர்களை பல ஊர்களிலிருந்து திரட்டி வாழப்பாடி நகரத்திற்கு வந்து அனைத்துக் கடைகளையும் மூடச் சொல்லி பந்து நடத்தினர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது. ஆனால் தருமபுரி ருசி அவர்களை விடாததால் அங்கேயும் ஒரு அரங்கேற்றத்திற்கு முயன்றார்கள். ஒரு தலித்தின் கடையை அடித்து நொறுக்கி கொள்ளையிட்டார்கள். அவர் இத்தனைக்கும் தீவிர அதிமுக விசுவாசி. பிறகு தலித் குடியிறுப்புக்குள் நுழைந்து தாக்கியிருக்கிறார்கள்.
நிலையையின் தீவிரத்தை தெரிந்துக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் குதித்தனர். மாவட்டச் செயலாளர் நாவரசன் துரிதமாக செயல்பட்டு மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டார். மாவட்ட காவல்தலைவர் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.
பின்பு தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தாக்குதலைத் தூண்டிய பாமக மாநில துணைப் பொதுச்செயலாளல் சண்முகம் முதல் குற்றவாளி என்று தெரியவந்துள்ளது, எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவருடன் 10 பாமகவினர் மீதும் இன்னும் பல வன்னியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித்துகள் தரப்பில் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரத்தைத் தூண்டிவிட்டு வழக்குப் பதிவானவுடன அந்த வீரர்கள் விடுதலைச் சிறுத்தைகளை அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். சமரசமாய் போகலாம், வழக்குகளைத் திரும்பப் பெறக் கேட்டுள்ளனர். சமரசத்திற்கு வாய்ப்பில்லை என்று நாவரசன் அறிவித்துள்ளார். எனவே என்ன செய்வதென்றுத் தெரியாமல் பாமக கும்பல் முழித்துக் கொண்டுள்ளது.
குச்சிக் கொளுத்தி வைத்தியரைப் பின்பற்றினால் ஏதாவது நல்லது நடந்தால் சரி.. இல்லை ஜெயில் தண்டனைக் கிடைத்தால் என்னாவது என்பதுதான் அவர்களின் கலக்கமாக இருக்கிறது.
எனவே அப்பாவி வன்னியர்களின் உணர்வை உசுப்பி அவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்பதே நமது விருப்பமாக இருக்கிறது