கடந்த நூறு ஆண்டுகளில் சென்னையின் சாலைகளோடு ஒப்பிடுகையில், நடந்திருப்பது பேரழிவு. உலகின் வேறு எங்காவது இப்படி நடந்திருந்தால் மெட்ரோ நிறுவனம் தடைசெய்யப்பட்டு அதன் நிர்வாகிகளும், அரசு அதிகாரிகளும் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்கள். சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது மவுன்ட்ரோடு உட்பட சென்னையின் முக்கியச் சாலைகளை நீர் சூழ்ந்தது. ‘மெட்ரோ ரயில் பணிகளினால் சாலைகள் உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கியக் காரணம்’ என தமிழக அரசின் பொறியாளர் சங்க முன்னாள் தலைவர் வெளிப்படையாக இதைக் குற்றம்சாட்டினார். சென்னையில் குவிந்துவரும் மக்கள்தொகைக்கு மெட்ரோ ரயில் வசதி மிக முக்கியமான வரத்து …