Home News கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

Comments Off on கூடங்குளம் மக்கள் போராட்ட ஆதரவுக் கருத்தரங்கம். சென்னை

கூடங்குளம் போராட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருகிறதா? /தினகரன் செய்தி

Saturday 2012-02-25

சென்னை : சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் உள்ள எஸ்பிஓ அலுவலகத்தில், ‘கூடங்குளம் அணு உலையை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. வக்கீல் கவுதம சன்னா தலைமை வகித்தார். வக்கீல் ரஜினி காந்த் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கி ணைப்பாளர் சுப.உதயகு மார் பேசியதாவது:

கூடங்குளம் அணு உலையை நாங்கள் இப்போது எதிர்ப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த போராட்டம் 22,9,1987ல் தொடங்கி 27 ஆண்டுகள் நடக்கிறது. கட்டிடம் பாதுகாப்பானதாக இல்லை என்று நாங்கள் கூறியதாவும், பூகம்பத்தால் கட்டிடத்துக்கு ஆபத்து இல்லை என்று விளக்கம் கூறுகின்றனர். நாங்கள் கூறுவது அணு உலை இயங்கினால் பாதுகாப்பு இல்லை என்பதுதான். மேலும், அணு உலையில் இருந்து வெளியேறும் கழிவை என்ன செய்ய போகிறார்கள் என்ற விளக்கமும் இல்லை. இதற்காக, கடல்நீரை உபயோகிப்பதாக கூறுகின்றனர். இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தளவு பாதிப்பு ஏற்படும்.

அணு உலையில் இருந்து வெளியேறும் அணுகதிர்கள் காற்று, தண்ணீரில் கலந்து எதிர்கால சந்ததியை பாதிக்கும். எங்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் தரவில்லை.
பிரதமர் மன்மோன்சிங், அமெரிக்காவில் இருந்து எங்களுக்கு பணம் வருவதாக கூறுகிறார். எங்களுக்கு எந்த நாடும் பண உதவி செய்யவில்லை. அணு உலையை சுற்றி வாழ்பவர்கள் தங்களுக்கு ஏற்பட உள்ள பாதிப்பை உணர்ந்து, தாங்களாகவே முன்வந்து தந்த பணத்தை வைத்துத்தான் போராட்டம் நடக்கிறது.

இவ்வாறு உதயகுமார் கூறினார். பின்னர், போராட்டக் குழு உறுப்பினர் புஷ்பராயன் பேசுகையில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையம் மின்சாரம் தயாரிக்கும் தொழிற்சாலை அல்ல. அணுகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை. இதுபோன்ற அணு உலைகளை பல்வேறு நாடுகள் மூடிவரும் வேலையில், இங்கு மட்டும் தொடங்க மத்திய அரசு ஆர்வம் காட்டுவது ஏன்?’’ என்றார். இந்த கருத்தரங்கில் மருத்துவர் புகழேந்தி, எழுத்தாளர் ஞானி, வக்கீல்கள் எழில் கரோலின், பிரசன்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

http://74.55.52.212/News_Detail.asp?Nid=3827

Load More Related Articles
Load More By admin
Load More In News
Comments are closed.

Check Also

அரக்கோணம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் முனைவர் திருமா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை!

தோழர். கௌதம சன்னா ஐந்தாண்டுகாலம் இந்த தொகுதிக்கு என்னென்ன புதுமையான பணிகளை செய்ய முடியுமோ …