சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ள காணொளி – திருவள்ளுவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, வாழ்க்கை வரலாறு, மறைவு உள்ளிட்ட விவரங்கள் விரிவாகப் பேசப்படும் காணொளியிது.
சர்வதேச தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிட்டுள்ள காணொளி – திருவள்ளுவர் பிறப்பு, குடும்பப் பின்னணி, வாழ்க்கை வரலாறு, மறைவு உள்ளிட்ட விவரங்கள் விரிவாகப் பேசப்படும் காணொளியிது.
பேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால …
எதிர்பாராத விதமாக முன்கூட்டியே கிளம்ப வேண்டிய அவசரம் வந்தது என் மலேசிய பயணத்திற்கு, அதற்குக் காரணம் மலாயா பல்கலைக்கழகம் மொழியியல்துறை, சர்வதேச தமிழ்மரபு அறக்கட்டளை, ஓம்ஸ் அறவாரியம், தமிழ் மலர் நாளிதழ் ஆகியன இணைந்து நடத்தும் கருத்தரங்கில் ஒரு கருத்தாளராக கலந்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உருவானதினால்தான். எனவே 20.01.2017 அன்று இரவு 11 மணி விமானத்தைப் பிடித்து மலேசியா போய் இறங்கும்போது காலை 6 மணி. அதாவது நம் நேரப்படி அதிகாலை 2 மணி. அங்கிருந்து மலாயா பல்கலைக்கழக வளாகத்தை சென்றடையும்போது அங்கு காலை …
ராஜம்: அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும் கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?
கீழ்மட்டச் சந்தை திவால்… ஜப்பானிலிருந்து நாடு திரும்பிவிட்டார் மோடி. அவர் செய்துவிட்டுப் போன பேரழிவில் மக்களின் கூக்குரல் தம் காதுகளுக்கு எட்டும் தூரத்தில் அவர் இல்லை. அதனால் ஜப்பானில் அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கண்டுக் கொள்ளவே இல்லை. அதுதான் அவருக்குத் தேவை. ஏனெனில் உலகம் முழுதும் அணு ஆற்றலுக்கு எதிரான போர்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது மோடி போன்ற கார்ப்ரேட் அனுதாபிகள் அணு ஆற்றல் முகவர்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள். அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு மோடி …
கரன்சியில் நடத்திய நாடகம்.. ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
பங்கு சந்தை வீழ்ச்சி.. யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை.. அன்டிலியா என்பது மும்பையின் நடுவில் வானைத் துருத்திக் கொண்டு நிற்கும் 11000ம் கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின் ஓர் அதிக விலையுள்ள 26 அடுக்கு மாடி வீடு. அதில் நான்கு பேர் …
சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்.. – கௌதம சன்னா சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது சேரி என்கிற சொல்லாட்சி. தற்காலத்திய புரிதலுக்காக மட்டுமே அந்த வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. அம்பேத்கர் இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறார். 1. கிராமத்திற்கு வெளியே உள்ள குடியிறுப்பு ஷிமீஜீணீக்ஷீணீtமீ ஷிமீttறீமீனீமீஸீts 2. ஒதுக்கப்பட்ட தனிக் …
சேரிகளின் தோற்றம் அம்பேத்கரின் கருத்துக்கள் விரிவான தளத்தில்… கௌதம சன்னா 1 சேரிகள் உருவானதற்கு இன பாகுபாடுகள் காரணமாகவில்லை என்ற முடிவை எட்டியப்பின் நமக்கு இருக்கக்கூடிய ஒரே அடிப்படையான அம்பேத்கரின் அவதானிப்புகளை விரிவாகப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சேரிகள் உருவாக்கம் இயக்கம் மற்றம் பரவல் குறித்த தெளிவினைப் பெற முடியும். தீண்டத்தகாதவர்கள் யார் அவர்கள் எவ்வாறு தீண்டத்தகாதவர்களாக ஆயினர் (-) என்ற நூலை அம்பேத்கர் 1948 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்திய வரலாற்று ஆய்வியல் வரலாற்றில் முதல்முறையாக கிராமத்திற்கு வெளியே தீண்டத்தகாதவர்களின் குடியிறுப்பும்,. …
துணைக் கண்டத்தின் படைப்புத் தொண்மங்கள் 1 இதுவரை உலகின் பல பாகங்களில் நிலவிக் கொண்டிருக்கும் உலகம் மற்றும் மனித படைப்புக் கதைகளைப் பார்த்தோம், இந்தியாவில் அவை எப்படி இருந்தன, இருந்துக் கொண்டிருக்கின்றன என்கிற கேள்வி இயல்பாகவே வாசகர்களுக்கு எழலாம், பல வாசகர்கள் அதை என்னிடம் கேட்டார்கள். சாதி என்பது மனித இனம் படைக்கப்பட்ட காலம் முதல் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும் என்கிற ஆதங்கத்திலிருந்து எழுவதுதான் அந்த கேள்வி. ஆகவே சாதியின் புதிர்களை இந்தியத் தொண்மங்களிலிருந்து …
மனித பிறப்பெடுத்த தொண்மங்கள் உலகில் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே மனித குலத்திற்கு ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்கான தேடலை அவர்களை பலவாறாக முன்னெடுத்திருக்கிறார்கள். அறிவியல் அடிப்படையில் யோசிக்க முடியாமல், ஏதோ ஒரு சக்திதான் இவ்வாறெல்லாம் செய்திருக்க முடியும் என்று நம்பியவர்கள் பல கதைகளை உருவாக்கினார்கள். அவை கால இட மாறுபாடுகளோடு உலகம் முழுதும் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கு ஒரு கதையும், இட வேறுபாட்டிற்கு ஏற்ப வேறு கதைகளும் உள்ளன. அந்த வகையில் நம் நாட்டில்கூட மனிதப் …
இந்தியா எனும் நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்து 125ஆம் ஆண்டில் நாம் நுழைந்துவிட்டோம். காலங்கள் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் உருவாகியிருந்தாலும் அது நிசமாகி இருக்கிறதா? நகரங்களில் எங்கு பார்த்தாலும் மாட மாளிகைகள். மாபெரும் நிறுவனங்கள், விண்ணைத் தொடும் கட்டடங்கள், உலகத்தை கைகளில் தவழவிடும் தொழில் நுட்பங்கள், உலகத்தின் எந்த முனையிலிருந்தும் யாரிடமும் தொடர்புகொள்ளவைக்கும் வாய்ப்புகள். எதுவும் மறைந்திருக்க முடியாது, யாரும் மறைக்கவும் முடியாது என எத்தனையோ வளர்ச்சிகள். உலகம் கற்பனைக்கு எட்டாத அளவில் மாறிவிட்டது. மாற்றம் …
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முன்னிரவில் அன்டன் செகோவின் ஆறாவது வார்ட் நாவலை படித்து முடித்தபோது என் மனதின் சமநிலை குலைந்துபோனதை உணர்ந்தேன். நாவல் முன்வைத்தக் கேள்விகளால் துளைக்கப்பட்டு இரவு முழுதும் உறக்கமின்றி போக பொழுது புலர்ந்தது. உறக்கமின்றிப் போன இரவு பல இரவுகள் தொடர்ந்தது அது ஒரு காலம். அது போன்ற ஓர் இரவை நீண்டகாலத்திற்குப் பிறகு உருவாக்கியது மெட்ராஸ் – திரைப்படம். இரவு முழுதும் சிந்தனை அலைவுகளால் உறக்கமின்றிப் போனது.
சில காரணங்களை மனதில் வைத்தே அம்பேத்கர் அவர்கள் fools rushing in where the angels fear to tread என்ற முதுமொழியை ஏன் பயன்படுத்தினார் என்று முகநூல் தோழர்களிடத்தில் கேள்வி எழுப்பினேன். வழக்கமாக அறிவுத் தளத்தில் விவாதிக்கத் தெம்பற்று வெறும் படங்களைப் போட்டு தன்னை முன்னிருத்திக் கொள்ளத் துடிக்கும் போக்கிலிருந்து நமது தோழர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான்.. சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம். …
பண்டிதர் அயோத்திதாசர்… தமிழ்மண் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை. சா.கௌதம சன்னா. குறிப்பு – கட்டுரையின் முதல் பக்கத்தின் இரண்டாம் வரிசையின் கீழே •எ வின் நெடிலுக்கு எ என்றுதான் அன்றைக்கு எழுதினார்• , இதன் பொருள் எ என்ற நெடில் எழுத்தின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள் என்று மாற்றி படிக்க வேண்டும், அதேபோல ஒ நெடிலுக்கும் ஓ என்று இல்லாமல் ஒ–வின் மீது புள்ளி வைத்து எழுதினார்கள். இந்த சிறு சேர்ப்புகள் அச்சில் வரவில்லை எனவே இக்குறிப்பை அடிப்படையாக …
– கௌதம சன்னா. கார்த்திகை மாதத்தின் பண்டகைகளில் முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதிதான். ஆனால் நமது சூழலில் அதை அதன் உள்பொருளோட கொண்டாடுகிறோமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். புராணக் குப்பைகளில் நமது நாட்டின் ஏராளமான மகத்துவங்கள் மறைந்துப் போய், குப்பைகளையே வணங்குதும், அதை கொண்டாடுவதமாக நமது சமூகம் மாறி நீண்டக் காலங்களாகிறது கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் பல இட்டுக் கட்டியவைகள் என்றாலும் அந்த இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் …
An Interview with Gowthama Sannah, Propaganda Secretary of the Viduthalai Chiruthaikal Katchi (VCK), by Prof.Dr. Hugo Gorringe – University of Edinburgh, United Kingdom, Hugo.Gorringe@ed.ac.uk ————————————————————- Published by ASIANIST, Edinburg, Uinted Kingdom ————————————————————- The compromised and ‘failing’ position of the Bahujan Samaj Party (BSP) and Republican Party of India, led one eminent commentator to urge Dalit activists and scholars to “look south because Tamil …
– கௌதம சன்னா எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன.. ஆனால் சிந்தனையில் இன்னமும் மாற்றம் ஏற்படாத ஒரு சமுகமாக நாம் இருக்கிறோம் என்பதை நினைத்து ஆச்சர்யமாக இருக்கிறது. இணையத்தில் அதன் தாக்கங்களைப் பெருமளவில் பார்க்க முடிகின்றது. குறிப்பாக தலித் மக்களுக்கு எதிராகவும் அவர்களின் கருத்தியல்களுக்கு எதிராகவும் பல நேரங்களில் வெளிப்படையாகவும், முற்போக்கு வேடம் அணிந்தவர்கள் நாசூக்காவும் தமது கருத்துக்களைப் பதிப்பிக்கின்றனர். இதுதான் இந்தக் கட்டுரையினை எழுதத் தூண்டியது. தனிப்பட்ட நபர்கள் விமர்சிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் அது புரிதலை உருவாக்குவதற்கு பதில் பகையினை உருவாக்கிவிடுகின்றனது. எப்படியிருந்தாலும் பேசப்பட …
தமிழகத்தின் தலித் சமூக அரசியல் வரலாறு தொடர்பான விரிவான விவாத அடிப்படையிலான உரையாடல் இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த. எடின்பர்க் பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர்.யூகோ கொரிஞ்ச் அவர்கள் தலித் அரசியல் தொடர்பாகவும், அதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்களிப்பு தொடர்பாகவும் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் …
எம் சி ராசா அவர்கள் எழுதிய நூலுக்கு எழுதிய மதிப்புரை எம்.சி.ராஜா (07.06.1885 – 28.08.1945) என்று அழைக்கப்பட்ட மயிலை சின்னத் தம்பி ராஜா அவர்களின் பெயர் ஒரு காலத்தில் இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் மந்திரச் சொல்லாக இருந்தது. குமரி முதல் டில்லி வரை அவரது புகழ் பரவி இருந்தது. ஆனால் கெடுவாய்ப்பாக வரலாற்றின் ஏடுகளிலிருந்து அவரது பெயர் மங்கிப்போகும் அளவிற்கு ஒர் இருட்டடிப்பு நடந்தது ஏன் என்பதை ஆய்விற்கு உட்படுத்த வேண்டிய காலமிது. எம்.சி.ராஜா அவர்கள் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட, சமுகப் புரட்சியை …