பேராசிரியர் நா கண்ணன் எழுதிய கொரியாவின் தமிழ்ராணி எனும் நூலுக்கான மதிப்பாய்வுரை இந்தியாவின் வரலாறு என்பதே அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்கிற ஐயம் எனக்கு நீண்ட காலமாகவே உண்டு. இந்திய மரபில் வரலாற்றை எழுதுதல் என்கிற முறை கிடையாது. மாறாக வரலாற்றினைப் புனைதல் மட்டுமே நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு முறை. இதில் மாற்றத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் வைதீக மரபுகளுக்கு எதிராக தோன்றியவர்கள். குறிப்பாக பௌத்தர்கள் மற்றும் சமணர்கள். நாளடைவில் இவற்றிலும் புனைவாக்கம் என்பது உள்வாங்கப்பட்டது என்பது வேறு. பிறகு, முகலாயர்கள் காலத்தில் வரலாற்றினைப் பதிவு செய்யும் பழக்கம் உருவானதுதான் மத்தியக்கால …