வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் இன்று நம்மோடு இல்லை என்பது வருத்தத்திற்குரியது. பரந்துப்பட்ட அளவில் இயற்கை வேளாண்மைக் குறித்த விழிப்புணர்வை அவர் உருவாக்கினார். அவரது சில கருத்துக்களோடு சமூகப் பார்வையின் அடிப்படையில் முரண்பாடுகள் இருந்தாலும் சமரசமின்றி தனது இறுதி காலம் வரை வாழ்ந்தார் என்பது மட்டுமல்ல வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் ஏராளமான எச்சரிக்கைகளை அவர் விட்டுச் சென்றுள்ளார்.
இயற்கை பற்றி மட்டுமல்ல மனித வாழ்வின் உன்னதங்களை இயற்கையை வெல்லும் பேராசையில் மனிதர்கள் சீரழித்ததின் மூலம் மீட்கமுடியாத அபாயத்தை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அவரின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததின் பதிலீட்டை அவர்கள் விரைவிலேயே பெறுவார்கள் என்பது அச்சமூட்டுகிறது.
ஒரு பெரியவர் இறந்துபோனால் ஒரு நூலகம் புதைக்கப்படுகிறது என்று ஓர் ஆப்பிரிக்க பழமொழி உண்டு அது நம்மாழ்வார் மறைவில் அப்படியே பொருந்தும். நம்மாழ்வாருக்கு எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌதம சன்னா
கருத்தியல் பரப்புச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி