விடுதலைச்சிறுத்தைகளின் முழக்கங்கள்
அணு ஆபத்தற்ற உலகம் – அதுவே
சிறுத்தைகளின் அறைகூவல்.
மனிதக்கழிவை அகற்றவே வழிதெரியாத போது
அணுக்கழிவை எப்படி அகற்றுவாய்!
மனிதக்கழிவை தலையில் சுமக்க வைப்பதே வெட்கக்கேடு
அணுக்கழிவை தலைமுறைகள் சுமப்பது சாபக்கேடு!
சுடுகாட்டுக்குப் போனால் சாம்பலாவது மிஞ்சும்
அணுகாட்டுக்குப் போனால் அதுவாவது மிஞ்சுமா?
கஞ்சிக்கு உலை எரியா நாட்டில்
அணுபிளக்க உலை எதற்கு ?
தலைமுறைகளைக் கொல்லும் அணுஉலை – இனி
யாருக்கும் தேவையே இல்லை!
புத்தர் சிரித்தார் – அணுகுண்டு சோதனை
அமெரிக்கர் சிரித்தார் – இரோசிமா நாகசாகி!
மிளகால் அடிபடுத்தியது பிரிட்டன்
அணுவால் அடிமைப்படுத்துவது அமெரிக்கா!
சோசலிச ருசியா செத்தப்பிறகு
சுடுகாடு கட்டுவது கூடங்குளத்திலா?
அணுநாடுகள் – மரண முதலாளிகள்!
அணுவிஞ்ஞானிகள் – மரண வியாபாரிகள்!!
அணுஆதரவாளர்கள் – இடைத் தரகர்கள்!!!
கூங்குளம் அணுஉலை – ருசிய
எமன் விரிக்கும் வலை!
அணுவைப் பிளக்க அணுஉலை – அமெரிக்க
மண்டையைப் பிளந்தால் விடுதலை!
பொய்யான மின்வெட்டு – வாக்களித்த
மக்களுக்கு அரசே வைக்கும் வேட்டு!
சூரிய மின்சாரம் நிலையாய் இருக்க
சூனியமாக்கும் அணுஉலை எதற்கு!
மக்களின் பேரலையில் பொசுங்கும்
கூடங்குளம் அணு உலை!
அணு உலைகளை மூடுவோம்
அகிலத்தை அமைதியில் காப்போம்!
தமிழக மின்சார வாரியமா? தரகு வாரியமா?
கொள்முதல் முகவரானது வெட்கக்கேடு!
மத்திய அரசே மின்னுற்பத்தியை
மாநில மயமாக்கு !
நதிகளை இணைத்து – புனல்
மின்சாரத்தைப் பெருக்கு!
அணுகுண்டால் இந்தியா வல்லரசாகுமா
அன்றாடம் காய்ச்சிகள் இருக்கும்வரை!
மின்சாரம் வேண்டும் எங்களுக்கு – அது
மின் மயானத்திற்கு மட்டுமல்ல!
இயற்கை அன்னை கொடுத்த வளம் ஏராளமிருக்க
அமெரிக்க அயோக்கியன் கெடுக்கும் நிலை தேவையா?
மிளகை தேடி இந்தியாவைப் பிடித்தான் வெள்ளையன்
மின்சாரத்தைக் காட்டி இப்போது பிடிக்கிறான் அமெரிக்கன்!
அன்று மண்விடுதலையே இந்திய விடுதலை
இன்று அது அணுஉலையிலிருந்து..
மக்கள் வளத்திற்காகத் தான் மின்சாரம்
ஆளும் வர்க்கத்திற்கு அல்ல!
மின்வெட்டைக் காட்டி அடிபணிய வைத்தால்
ஓட்டுப் பெட்டியை அடித்து நொறுக்குவோம்!