12.11.2012 அன்று காலையே தலைவர்.திருமா அவர்கள் தருமபுரியில் நடந்த சாதி வெறியர்களின் தாக்குதலில் பாதிக்கப் பட்ட மக்களைச் சந்ததிக்க கிளம்பி விட்டார், முன்னேற்பாடுகளைக் கவனிக்க நானும் மற்றத் தோழர்களும் முன்னதாகவே அடுத்த கிராமங்களுக்குப் போய்விட்டோம், அப்படி நத்தம் சேரியில் போய் மக்களோடு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியவாதி மணியரசன் இளை
கொஞ்ச நேரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் சம்பத் மற்றும் மல்லை.சத்யா ஆகியோர் வந்தனர் அவர்களை நத்தம் தலித்துகள் அவர்களை உள்ளே விட மறுத்தனர், அவர்கள் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தும் வேலைக்காவில்லை,, சில தோழர்கள் எங்களிடம் முறையிட்டனர், நாங்கள் என்ன செய்யமுடியும். மக்களது உணர்வுதானே எங்களது உணர்வும் எனவே மக்களை கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டோம். வேறு வழியில்லை அவர்கள் திரும்பிப் போய்விட்டனர், அல்லது வெளியேற்றப் பட்டனர்.
மதியம் 3மணிக்கு தலைவர் திருமா அவர்கள் வந்தார், மக்கள் வெள்ளம் உடன் வந்தது. எங்கும் கண்ணீர்,ஓலம், முறையீடு. ஆயிரக்கணக்கில் கூடியக் கூட்டத்தைப் பார்த்து காவலர்கள் ஒதுங்கி நின்றார்கள். அவர்களால் என்ன பயன் என்பதை மக்கள் தமது ஒற்றுமையின் வழியாக காட்டினார்கள். மக்கள் அவரை நம்புவது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த நம்பிக்கையை காப்பற்றுவேன் அவரும் சொன்னார்.
ஆனால், ஒரு நாடாரை அவமதித்து விட்டதாக சொல்லப்பட்ட நிகழ்வுக்காக கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ ஓடிப்போய் பார்த்தார், வன்னியக்குல சிங்கம் ராமதாசு இதை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமது ரத்தம் படிந்தக் கரத்தை கழுவிக் கொண்டார். திராவிடச் செம்மல்கள் அறிக்கைகளை வெயிட்டு தமது ஓட்டு வங்கிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டார்கள்.. காங்கிரசு காரர்கள் சொல்லத் தேவையில்லை.. எப்படி பார்த்தாலும் இந்தக் கலவரத்தில் அம்பலமானது வன்னியர்கள் மட்டும் இல்லை. தமிழகத்தின் அத்தனைத் தலைவர்களும் தான்.