– டாக்டர் ராமதாசால் ஆசிர்வதிக்கப்பட்டு, காடு வெட்டி குருவால் வழிகாட்டப்பட்டு, பாமகவின் முன்னணி மாவட்ட நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு, முன்னாள் தீவிர மா.லெ வன்னியத் தோழர்களால் கூர் தீட்டப்பட்டு, சாதி வெறி ஊட்டப்பட்ட வன்னிய ஆண்கள், பெண்கள் ,இளைஞர்கள், சிறுவர்களால் நடத்தப்பட்ட தமிழக வரலாற்றின் மிகக் குருரமானத் தாக்குதல் நாகராசன்
– தாககுதல் நடத்துவதற்கு முன்பே அவர்களை தம்பதிகளைப் பிரித்து வைக்கும்படி சேலம் ஐஜி-யிடம் புகார் அளித்தது திவ்யாவின் தந்தை நாகராசன் மட்டுமல்ல.. உடன் சென்றவர்கள் அவரை தொடர்ச்சியாக வற்புறுத்தியது ஏன்…?
– காவல் விசாரணையின்போது என்னால் என் மகளுக்கு எந்த ஆபத்தும் வராது, அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு வந்தவர் மனமுடைந்திருப்பாரா…?
– தம்மகளின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய நாகராசனை ’போறாம்பாரு பறையன் சம்பந்தி’ என்று அவரை தொர்ந்து அவமதித்து அவரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது யார்..யார்…?
– நாகராசனை ஊரில் நிம்மதியாக இருக்க விடாமல் தொடர்ந்து அவரை காவல் துறையிடம் அழைத்துச் சென்று மன்றாட வைத்தது யார் யார்…?
– இளவரசனோடு பைக்கில் வந்துக்கொண்டிருந்த திவ்யாவை வழியில் பார்த்த அவரது அம்மா வீட்டுக்கு வந்துவிடு என்று அழைத்தபோது மறுத்த திவ்யா ‘நான் வந்தால் உங்க சாதி சனம் என்னை கொன்று விடுவார்கள்’ என்று மறுப்பு கூறிவிட்டு சென்ற பிறகு எப்படி நாகராசன் தற்கொலை செய்துக்கொண்டார்..?
– நாகராசம் தற்கொலை செய்துக் கொண்ட விவரம் அவரது மனைவிக்கு மற்றும் நெருங்கிய உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் ஊரில் உள்ள சில வன்னிய இளைஞர்களுக்கு மட்டும் உடனடியாகத் தெரிந்த மர்மமென்ன..? அவர்கள் மட்டும் உடலை வெளியே கொண்டு வந்தது எப்படி..?
– தற்கொலை செய்துக்கொண்டவர் விசம் குடித்துவிட்டார் என்று சொன்னவர்கள் பிறகு துக்கு மாட்டிக்கொண்டார் என்று ஆனது எப்படி..?
– நாகராசனின் தற்கொலையை போலிசுக்குத் தெரிவிக்காமல், உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பாமல் உடனடியாக சாலை மறியலுக்கு கொண்டு வந்ததின் மர்மமென்ன..?
– காவல் துறையின் கவனத்தினை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் பிணத்தோடு சாலை மறியல் செய்வது நோக்கமாக இருந்திருந்தால் அவர்களை வரவிடாமல் தடுக்க அவர்களின் தலைவர் ராமதாஸ் அவர்களின் பாணியான நெடுஞ்சாலையோர மரங்களை வெட்டிப்போட்டு தடுப்புகளை உருவாக்கியது ஏன்..?
– முன்றுச் சேரிகளைக் கொளுத்தும் அளவிற்கு 30000 ருபாய்க்கு பெட்ரோலும், தின்னரும், நியாயவிலைக் கடையில் மண்னெண்ணெய்யையும் ஒரு மாதமாக சேகரித்து வந்தது ஏன்..? பெட்ரோல் குண்டுகளை தயாரித்து வைத்தது ஏன்..?
– நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய சேரிகளில் தாக்குதல் நடத்துவதற்கு சுற்றியுள்ள 25 வன்னிய ஊர் தெருக்களில் கூட்டங்களை நடத்தி முன்னேற்பாடுகளை செய்து வந்தது யார்.. யார்..?
– இளவரசன் குடும்பத்தை மட்டும் பழிவாங்கும் நோக்கம் இருந்ததிருந்தால் அவரது குடும்பத்தில் யாருக்காவது உயிர்ச் சேதம் உண்டாக்கியிருக்கலாம் ஆனால் 3 சேரிகளை தாக்குவதற்கு நோக்கம் என்ன..?
– ஓவ்வோர் வீட்டிலும் முறையாக, ஒரே மாதிரியாக பீரோக்கள் முதலில் உடைக்கப்பட்டு அதில் பணமும், நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு பின்னர் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டு கடைசியாக தீயிட்டு கொளுத்தப்பட்டது தற்செயல் நிகழ்ச்சியா..?
– தாக்குதல் நடத்தியபோது வந்த 2000 வன்னியர்களில் 100க்கு மேற்பட்ட பெண்களும் 200க்கும் மேற்பட்ட சிறுவர்களை ஈடுபடுத்தியதும், வந்த சிறுவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதுடன் ஓட்டு வீடுகளின் மீது அவர்களை ஏற்றி பெட்ரோல் ஊற்றி கொளுத்த வைத்தது பயிற்சி இல்லாமல் நடந்திருக்குமா..?
– தாக்குதல் நடத்துவதற்க 3 நாட்களுக்கு முன்பே பாமக முன்னணி நிர்வாகிகள் தருமபுரியில் முகாமிட்டிருந்தது ஏன்..?
– தாக்குதல் நடத்துவதற்கு எட்டு நாட்களுக்கு முன்பு ‘வன்னியப் பெண்களை திருமணம் செய்பவர்களை வெட்டிச்சாயுங்கள்’ என்று காடுவெட்டி குரு அருகில் உள்ள கிராம நிகழ்ச்சியொன்றில் பேசிவிட்டு போன பிறகு உடனடியாகத் தாக்குதல் தொடங்க முடியாமல் வாய்ப்பை எதிர்பார்த்து திட்டமிட்டது யார்..யார்..?
– தாக்குதல் நடத்துவதற்கான தேதியை முன்பே குறித்து விட்டு சாக்கு ஒன்றிற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு பிணம் தேவை.. அதற்கு தோதாக நாகராசன் மாட்டிக்கொள்ள ஒரு மாத காலம் அவரை பறையனின் சம்பந்தி என்று அவமதித்து நோகடித்ததுதான் அவரை தற்கொலைக்குத் உசுப்பியது என்று நியாயமாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அப்படி சொல்லப்படாதது ஏன்..?
– ஏனென்றால் தற்கொலைக்குத் தயாராக இல்லாத நாகராசன் பாமகவின் அடித்தளத்தை மீட்டெடுக்க பலியிடப்பட்டார்.. 7.11.2012 அன்று சாகும் வரை அவர் துக்கில் தொங்கவிடப்பட்டு அவரது குடும்பத்திற்கு கூடத் தெரியாமல் சாலைக்கு கொண்டுவரப்பட்டது..என்பததான் அவர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்கிறது…
– ஒரு அப்பாவி வன்னியத் தந்தையை படுகொலை செய்த வன்னிய சாதி வெறி அரசியல் வாதிகளை தலித்துகள் அடையாளம் கண்டுக் கொண்டுவிட்டனர்.. வன்னியர்ளே நீங்கள் எப்போது….?
ஒரு படுகொலையையும் செய்துவிட்டு சேரிகளையும் கொளுத்தியவர்களை என்ன செய்யலாம் யோசியுங்கள்… யோசியுங்கள்…