விரைவில் பாகிஸ்தான் நாட்டில் ராணுவப் புரட்சி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. முதன்முறையாக வாஜ்பாய் பிரதமரானபோது கார்கில் போர் வந்தது. வெற்று பாறைகள் நிறைந்த சியாச்சின் மலை முகடுகளை பாதுகாக்க என்ற பாசாங்கில் நடத்தப்பட்ட ஒத்திகைப் போர் அது. அந்த போர் முடிந்த உடனே ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஷ் முசாரஃப் அதிபராக ஆட்சியைப் பிடித்தார். அதைக் காரணம் காட்டி இந்தியாவில் அதிபர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றபாஜக-வின் கோரிக்கை வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டம் மாற்றி எழுத நீதியரசர் வெங்கடாசலய்ய தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து வந்த அரசியல் மாற்றங்களால் அதிபர் ஆட்சி என்ற பாஜகவின் கனவு தகர்ந்துப் போனது.
ஆனால் தற்போது அக்கனவு உயிர்த்தெழுந்துள்ளது. முதலில் மோடி அவர்களை அதிபர் ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதைப் போலவே முன்னிருத்தி அவரை பிரதமராக்கினார்கள் இந்துத்வ சக்திகள். மோடி பிரதமாரானார் எனவே அதிபரைப் போலவே நடந்துக்கொள்ளத் தொடங்கினார். ஆனாலும அதற்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் தேவையல்லவா?.
எனவேஇந்துவ சக்திகளின் அதிபர் கனவு நனவாக்க வேண்டுமானால் அண்டை நாடுகளில் அதைப் போன்ற சூழல் நிலவ வேண்டும். அப்போதுதான் நமது ஊடகங்கள் சரியாக ஊதத் தொடங்குவார்கள். இலங்கையில் அதிபர் ஆட்சி. சீனாவில் அதிபர் ஆட்சி. ஆனால் பாகிஸ்தானில் அது உருவானால்தான் திட்டம் முழுமைப் பெறும். எனவே பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நிச்சயம் உருவாகும். அதற்கான சாத்தியக்கூறுகளை இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். எல்லை அத்துமீறல்கள் அதன் தொடக்கம். தொடர்ந்து ஒரு நாடகப்போர் நடக்கும்.. இந்தியாவில் அதிகார வடிவ மாற்றம் பற்றின விவாதம் தொடங்கும்..
எனவே வரும் நாட்களில் நடுவண் அரசில் மயிர்கூச்செறியும் அரசியல் நாடகக்க காட்சிகளைக் காணலாம்..