தமிழ் திரைப்பட உலகம் உண்மைகளை திரிப்பதில் வல்லவர்களை கொண்டுள்ள துறை என்பதை யார் தான் மறுக்க முடியும். மேற்கண்ட படம் அந்த வகையில் சேர்க்க தக்க படம் . போதி தர்மன் ஜென் பௌத்த சிந்தனையின் மூலவர் என்பதை முருகதாஸ் மறைத்திருந்தால் கூட அது அவரது அறியாமை என்று மன்னித்து விடலாம், ஆனால் அவர் புத்த துறவி என்பதையே அவர் மறைத்திருப்பது மிகுந்த உள் நோக்கம் உள்ளவர் என்பதை காட்டுகிறது.
பல்லவர்கள் தமிழர்கள் என்பது இன்னும் உறுதி செய்யபடாத நிலையில் தன் தீவிர தமிழ் பற்றை காட்டிக்கொள்ள, முற்கால சைவர்கள் பௌத்த படுகொலைகளை காஞ்சியில் எவ்வாறு நிறைவேற்றினார்களோ, அதே காஞ்சியில் பிறந்து வளர்ந்த முருகதாஸ் தம் தலைமுறை சிந்தனையினை மறக்காமல் மீண்டும் ஒரு முறை போதி தர்மர் அவர்களை பிம்பமாக்கி கொலை செய்திருக்கிறார். படத்தில் எங்குமே போதி தர்மர் ஒரு பிக்கு என்றும் , புத்தரை பின் பற்றுபவர் என்று கூறாமல் மறைத்ததின் மூலம் தம் தலை முறை பணியினை வியாபாரத்திற்காக கச்சிதமாக முடித்துள்ளார்.
விரிவாக விவாதிக்க வேண்டிய வரலாற்று தருணம், மெயில் டுடே இதழில் என்னுடைய சில கருத்துக்கள் பதிவாகியுள்ளது, எனினும் விரைவில் விரிவாக பின்னர் வெளிவரும்.