ராசீவ் கொலையில் குற்ற தண்டனைப் பெற்ற மூவர் உயிர் காக்க தன் உயிரை ஈகம் செய்த செங்கொடியின் வீரம், வேலுநாச்சியார் படையில் உலகின் முதல் தற்கொலைப்படை பெண் போராளியான குயிலியின் வீரத்திற்கு இணையானது. ஆனால் அந்த குயிலி ஓரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள் என்பதற்காக தமிழ் பேசும் தமிழ் தேசியவாதிகளின் வரலாற்றுப் பார்வையிலிருந்து முற்றிலும் மறக்கப்பட்டாள். நன்றி கெட்ட இந்த தமிழ்ச்சாதியின் மன ஓட்டம் இது.
சாதியின் கொடும் கரங்களிலிருந்து தம்மைக் காக்க போராடும் தலித் மற்றும் பழங்குடிகடுகொள் பலைகளை செய்யப்படுவதை எண்ணி இந்த தமிழ் பேசும் சமூகம் என்றைக்கும் குற்ற உணர்வு கொண்டு வெட்கப்பட்டது இல்லை, ஆனால் ஈவு இரக்கம் இன்றி அவர்களைச் சுரண்டி கொழுத்துள்ளது. இதை எந்த தமிழ்த் தேசியவாதியும் கேள்வி கேட்பதுகூட இல்லை இதுதான் இவர்களது தமிழ் உணர்வு.
இந்த தமிழர்களின் சுரணைக்கு சூடு கொடுக்கும் விதமாக : தமிழகத்தின் மிகவும் ஓடுக்கப்பட்டு, சுரண்டப்பட்ட பழங்குடியினம் இருளர் பழங்குடி, கேட்பதற்கு நாதியற்ற வகையில் சுரண்டப்பட்டு மிகவும் ஏழ்மையில் வாடும் இந்த இனத்திலிருந்து உதித்த வீரமங்கை செங்கொடி, இவர்களின் சுரணையை மட்டுமல்ல, மனசாட்சியையும் கேள்வி கேட்கிறாள்..
மூவரின் தூக்கு தண்டனையை உயர்நீதி மன்றம் தற்காலிகத் தடை செய்ததை உயர்நீதி மன்ற வளாகத்தில் கொண்டாடிய போராளிகளே : செங்கொடிகளின் வாழ்க்கைத் தரத்தை அல்ல அவர்கள் மீதான சாதிய ஒடுக்கு முறைகளை எதிர்த்துப் போராடத் துணிவு உண்டா? என்பதை செங்கொடி தன் உடலை சாட்சியாக வைத்துக் கேட்கிறாள். உங்களின் போராட்டம் வெறும் மூன்று பேருக்கு மட்டும் என்றால், உங்களைவிட கேடுகெட்டவர்கள் யாரும் இருக்கும் முடியாது. எனவே சாதியை எதிர்த்து என்றைக்கு நீங்கள் போராட முன் வருகிறீர்களோ அப்போதுதான் நீங்கள் கொண்டாட்டத்திற்கு தகுதியானவர்கள்.
ஏனெனில் இன்றைக்கு பெற்றத் தற்காலிக வெற்றி உங்களின் முயற்சியால் அல்ல அது செங்கொடியின் தியாகத்தால். உங்களின் கொண்டாட்டம் செங்கொடிகளை உயர்த்துவதாக இருக்க வேண்டும். அப்படியில்லையெனில வெறும் கேடுகெட்ட சாதியின் பிண்டங்களாகத்தான் நீங்கள் உலவுவீர்கள்.